பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

C

34

cach

இலக்கங்கள்:
0,1,2,3,4,5,6,7,8, 9,
குறிகள்:

  • + \ | " ( = | { # ) ~ ; } / % - [, ?^ - ]'. & blank

C constants, kinds of - சி மாறிலிகளின் வகைகள் :இவை பின்வருமாறு.
1) உருவகை: உருமாறிலி, சரமாறிலி
2) எண் வகை: முழு எண் மாறிலி, மெய்மாறிலி
3) முழுஎண் மாறிலி: குறியற்றது, நீண்டது, குறுகியது. முழு எண்
4) மெய்மாறிலி: மிதப்பது, இரட்டை

C language, elements of - சி மொழியின் கூறுகள் : இவை பின்வருமாறு:
1) சி உருத்தொகுதி 2) சி மாறிலிகள் 3) விடுபடு வரிசை 4) சி மாறிகள் 5) தொடங்குதல் 6) செயலிகள் 7) சேமகச் சார்பலன்கள் 8) எண்கணிதச் செயல்கள் 9) தகவல் வகை மாற்றல் 10) எண் கணிதக் கூற்றுகள்.

C programme, sections of - சி நிகழ்நிரலின் பகுதிகள்: இவை பின்வருமாறு 1) தலைப்புப் பகுதிகள் 2) எழுத்து அறுதியிடும் பகுதி 3) ஆணைக் குறிப்புப் பகுதி. இம்மூன்றின் விரிவை அவ்வப்பதிவில் காண்க.

C programme,steps in - சி மொழியின் படிகள் : 1) உருவாக்கல்/பதிப்பித்தல் 2)தொகுத்தல் 3)இணைத்தல் 4) நிறைவேற்றல்.

C variables - சி மாறிகள் : மொழித் தொடர்பாகப் பயன்படுபவை.
மூன்று எண்களின் சராசரியைக் காண்பதாகக் கொள்வோம். இம்மூன்று எண்களும் உட்பலன், சராசரி, வெளிப்பலன்.
மூன்று எண்கள் → கணிப்பொறி → சராசரி. இதற்குரிய பணியைக் கணிப்பொறி உரியமுறையில் செய்யும். A, B, C சேமிப்பு இடங்களாக இருக்கட்டும். விளைபயன் D இல் சேமிக்கப்படும். இங்கு A, B, C, D என்பவை மாறிகள். நினைவக இடப்பெயரே மாறி எனப்படும்.

cache - A small fast storage buffer integrated in the central processing unit of some large computers.
மறைவிடம் : இது சிறியதும் விரைவு உள்ளதுமான சேமிப்புத்தாங்கமைவு. சில பெரிய கணிப்பொறிகளின் மையச் செயலகத்தோடு இணைந்திருக்கும்.

cache memory - A high speed buffer memory found between processor and main memory.