பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cal

35

card

மறைவிட நினைவகம் : உயர் விரைவுத் தாங்கமைவு நினைவகம், முறையாக்கிக்கும் முதன்மை நினைவகத்திற்கும் இடையே காணப்படுவது.

calculator - A common data processing device to carry out logic and arithmetic operations. It has a limited programming ability.
கணிப்பான் : முறைமை மற்றும் எண்கணிதச் செயல்களைச் செய்யப் பொதுவாகப் பயன்படும் மின்னணுக் கருவியமைப்பு. இதற்கு வரையறையுள்ள நிகழ்நிரல் திறனே உண்டு.

calculation - கணக்கீடு : எண் கணக்குகளைக் குறிப்பது.

call - A keyword within a programme instructing a computer to start on another routine.
அழைப்பு : நிகழ்நிரலிலுள்ள திறவுச்சொல் மற்றொரு வழக்கமான செயலைத் தொடங்க ஆணைக்குறிப்பு வழங்குவது.

call in - Transferring of control of a digital computer from main routine to a subroutine.
உள்ளழை : ஓர் இலக்கக் கணிப்பொறியின் கட்டுப்பாட்டை வழக்கமான முதன்மைச் செயலிருந்து வழக்கமான துணைச் செயலுக்கு மாற்றுதல்.

call instruction - A type of instruction allowing a return to the programme's original sequence.
அழைப்பு ஆணைக்குறிப்பு : ஒருவகை ஆணைக்குறிப்பு. நிகழ்நிரலின் முதல் வரிசைக்குத் திரும்புகையை அனுமதிப்பது.

call number - A set of instructions to set up and a cell given sub-routine.
அழைப்பெண் : கொடுக்கப்பட்ட வழக்கமான துணைச் செயலை அழைக்க அமைக்கப்படும் ஆணைக் குறிப்புத் தொகுதி.

CANCEL - A deletion of information by a remote computing.
நீக்கு : தொலைக் கணிப்பொறித் தொகுதியினால் நீக்கப்படும் தகவல்.

capacity- The number of words or characters contained in a particular storage device. கொள்திறன் : குறிப்பிட்ட ஒரு சேமிப்புக் கருவியமைப்பில் உள்ள சொற்கள் அல்லது உருக்களின் எண்ணிக்கை.

card - 1.punched card. 2.A printed circuit board plugged into a main circuit board to increase the capacity and function of a computer system.
அட்டை : 1) துளையிட்ட அட்டை, 2) அச்சியற்றி மின் சுற்றுபலகை, முதன்மை மின் சுற்று பலகையில் செருகப்