பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

card

36

cas

பட்டிருக்கும். ஒரு கணிப்பொறித் தொகுதியின் கொள்திறன், வேலை ஆகியவற்றை உயர்த்துவது.

card code - The representation of characters on a punched card by means of punching one or more holes per column,
அட்டைக் குறிமுறை : ஒரு அட்டையில் ஒரு பத்திக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துளைகளை இட்டு அதில் உருக்களைக் குறித்தல்.

card loader - A programming routine allowing a dock of cards to be read into a memory.
அட்டைச் சுமை ஏற்றி : வழக்கமான ஒரு நிகழ்நிரலாக்கு செயல். இதில் பல அட்டைத் தொகுதிகள் முதன்மை நினைவகத்தில் படிக்க அனுமதிக்கப்படும்.

card punch - A computer input device punching signals from the central processing unit.
அட்டைத்துளையிடுவி : கணிப்பொறி வெளிப்பலன் கருவியமைப்பு. மையச் செயலகத்திலிருந்து குறிகைகளைப் பெற்றுத் துளையட்டையில் துளைகள் இடும்.

carriage return - The operation causing the next character to be printed the extreme margin and usually advancing the next line at the same time.
இடம் செல்லல் : இது ஒரு செயல். இதில் அடுத்து அச்சியற்ற வேண்டிய உரு, கடைக் கோடி இட ஓரத்திற்குச் செல்லும். அதே சமயம் அடுத்த வரியும் முன் நகர்ந்து வரும்.

carry flag - The flip-flop circuit showing an overflow in arithmetic operation.
கொண்டுசெல் கொடி : இது எழுவிழு மின்சுற்று எண் கணிதச் செயல் வழிவதைக் காட்டும்.

carry signal - A signal produced in a computer when the difference between two digits is zero.
கொண்டுசெல் குறிகை : இரு இலக்கங்களுக் கிடையே வேறுபாடு சுழியாக இருக்கும் பொழுது உண்டாகும்.

carry time - The time needed to transfer all carry digits to the next higher column.
கொண்டுசெல் நேரம் : அடுத்த உயர்பத்திக்கு மாற்ற ஆகும் நேரம்.

cascade control - An automatic control system with various control units linked in sequence.
அருவிக் கட்டுப்பாடு : இது ஒரு தானியங்கு கட்டுப்பாட்டு முறை. இதில் பல கட்டுப்பாடுகளும் வரிசை முறையில் இணைந்திருக்கும்.