பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

check

41

cir


உதவுகிறது. இப்பெட்டியிலுள்ள சதுரத்தைத் தட்ட விருப்பம் இயல்வதாக அமையும். அதை மீண்டும் தட்ட விருப்பம் இயலாததாகும் சரிக்குறி விருப்பம் உண்டு என்பதையும் வெற்று இடம் அது இல்லை என்பதையும் காட்டும். இப்பெட்டி சாளர மென் பொருளில் உள்ளது.


check box types - சரிபார்ப்புப் பெட்டியின் வகைகள் : 1) சரிபார்க்காப் பெட்டி, 2) இயலாப் பெட்டி.


check indicator - A device informing the operator the occurrence of an error. சரிபார்ப்புக் காட்டி : ஒரு பிழை தோன்றுவதை இயக்குபவருக்குக் காட்டும் கருவியமைப்பு.


check register - The register in which transferred data are temporarily stored. சரிபார்ப்புப் பதிவகம் : இதில் மாறிய தகவல்கள் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.


Chennai in IT Industry - தகவல்தொழில் நுட்பத் துறையில் சென்னை : இன்று இந்தியாவிலேயே இத்தொழில் நுட்பத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதற்கு நல்ல சூழலும் கணிப்பொறி அறிவு வளமும் இருப்பதே காரணங்கள். இத்துறையை உருவாக்கியவை மாண்புமிகு கலைஞர் தலைமையில் உள்ள தமிழ்நாடு அரசும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பவியல் பூங்காவும் (STPI) ஆகும்.


chip - An integrated micro-circuit doing a significant number of functions, நறுவல் : ஒருங்கிணைந்த நுண் மின்சுற்று, குறிப்பிடத்தக்க வேலைகளைச் செய்வது.


Chris Burton - கிரைஸ் பர்டன் : பிரிட்டன் பொறியர், தொடக்க காலக் கணிப்பொறிகளின் வரலாறு எழுதியவர்.


circuit - A path for two way communication between computer terminals. மின்சுற்று : கணிப்பொறி முனைகளுக்கிடையே இருவழிச் செய்தித் தொடர்புக்காக உள்ள வழி.


circuit diagram - Physical representation of components and inter-connections defining a specific hardware functional design. மின்சுற்று விளக்கப்படம் : ஒரு குறிப்பிட்ட வன்பொருள் வேலைசெய் வடிவமைப்பை வரையறை செய்யும் இணைப்புகளையும் பகுதிகளையும் குறிக்கும் படம்.


circuit elements - மின்சுற்று கூறுகள் : இவை படிகப் பெருக்கிகள், இருமுனை வாய்கள், தடையளிப்பிகள் ஆகியவை. சிலிகானின் மிகச்