பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

class

42

clu


சிறிய பரப்பில் இவை ஒருங்கிணைக்கப்படும். இவற்றின் பெயர் ஒருங்கிணைசுற்று ஆகும்.


class modules, cls - வகுப்பு அலகுகள், வஅ : இவை படிவங்களை ஒத்தவை. கண்ணுக்குப் புலப்படா. தங்கள் சொந்தப் பொருள்களைப் பயனாளிகள் உருவாக்க இவை உதவும்.


clause - The part of a statement in the COBOL language describing the structure of an elementary item. உட்பிரிவு : கோபல் மொழியில் ஒரு கூற்றின் பகுதி, ஒரு தொடக்க இனத்தின் அமைப்பை விளக்குவது.


clause, kinds of - உட்பிரிவு வகைகள் : 1) ஒதுக்கீட்டு உட்பிரிவு. 2) முறைமை உட்பிரிவு. 3) மாற்று உட்பிரிவு.


clear - To restore a storage device usually denoting zero. தெளிவாக்கல் : சேமிப்புக் கருவியமைப்பை வழக்கமாகச் சுழியைக் காட்டும் நிலைக்குக் கொண்டு வருதல்.


clipboard - A temporary storage location in windows. கவ்வுபலகை : சாளர மென்பொருளில் உள்ள தற்காலிகச் சேமிப்பு இடம்.


clock, CLK - A source of accurately times pulses used for synchronisation in a digital computer. கடிகை, சிஎல்கே : துல்லிய நேரத்துடிப்புகளின் மூலம் இலக்கக் கணிப்பொறியில் ஒத்திசைவிற்காகப் பயன்படுவது.


close button - மூடுபொத்தான் : இது விண்டோஸ் என்னும் சாளர மென்பொருளை மூடப் பயன்படுவது.


closed file - மூடிய கோப்பு : படிப்பதற்கோ எழுதுவதற்கோ இயலாத கோப்பு.


closed loop - The loop whose execution continues indefinitely in the absence of any external control. மூடிய வளையம் : இதன் நிறைவேற்றும் செயல், புறக்குறுக்கீடு இல்லாத நிலையிலும் முடிவின்றித் தொடர்ந்து செல்வது.


closing - Bringing to a close: eg. file மூடல் : ஒரு முடிவுக்குக் கொண்டு வருதல், எடுத்துக்காட்டு : கோப்பு.


cluster - A group of components: eg microprocessor; a group of terminals or peripherals in close proximity to each other and order the control of a central device: eg. computer. கொத்து : இயைபுறுப்புகளின் தொகுதி: நுண்முறையாக்கி