பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

COB

43

col


வெளிப்புறப் பகுதிகள் அல்லது முனைகளின் தொகுதி, ஒன்றுக்கு மற்றொன்று நெருக்கமாக அமைந்து, ஒரு மையக் கருவியமைப்புக் கட்டுப்பாட்டில் இயங்குவது, எடுத்துக்காட்டு : கணிப்பொறி.


COBOL, common business oriented language - A widely used high level computer language, suitable for non-mathematicians and business people. கோபல், பொது வணிக நோக்கு மொழி : மிகப்பரவலாகப் பயன்படும் உயர்நிலைக் கணிப்பொறிமொழி. கணக்கில் தேர்ச்சி இல்லாதவர்களும் வணிகர்களும் பயன்படுத்தக் கூடியது.


Codd E.F Dr - டாக்டர் ஈ.எப். காட் : ஆர்டிஎம்பிஎஸ் என்னும் அமைப்பை அறிமுகப்படுத்தியவர். தகவல் பேணுகைக்குப் பல நிறுவனங்களில் பயன்படுவது: ஆரகிள்.


code - A system of symbolic characters used to represent data. The set of instructions in a computer programme. குறிமுறை : தகவலைக் குறிக்கப் பயன்படும் குறியீட்டு உருக்களின் தொகுதி. ஒரு கணிப்பொறி நிகழ்நிரல் ஆணைக் குறிப்புகளின் தொகுதி.


COGO - A high level computer language meant for civil engineering. கோகோ : ஒர் உயர்நிலைக் கணிப்பொறி மொழி. பொதுப் பொறியியலில் பயன்படுவது.


collator - A collating unit. ஒருங்கிணைப்பி : ஒழுங்கு படுத்தும் கருவியமைப்பு.


column - The vertical arrangement of characters. பத்தி : உருக்கள் செங்குத்தாக அமைந்திருந்தல்.


column printer - A small line printer. பத்தி அச்சியற்றி : ஒரு சிறிய வரி அச்சியறி.


colour attribute - நிற இயல்பு : பாடம் காட்டப்பட வேண்டிய வண்ணத்தை இது சுட்டிக் காட்டும்.


colour combination - Combining columns suitably. The popular colour combinations are the following:

1. Triadic scheme: An equilateral triangle is drawn inside the circle. The columns at the vertices of the triangle are used.

2. Analogous scheme : Any three neighbouring columns on the circle are used in a 24 bit colour monitor the primary colours RGB have 8 bits each leading is 256 x 256 x 256 combinations.

வண்ணக் கூடுகை : தகுந்த முறையில் நிறங்களைக் கலத்தல். மிகப் பரவலாக உள்ள