பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

47

com


பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைக் கடத்துவது.

4) கம்பியிலா இணைப்புகள்: இதற்கு வானொலி அலைகள் தகவல் தொடர்பு வழியாகப் பயன்படுபவை. தொலைவு மாறும்பொழுது, செயற்கை நிலாக்கள் பயன்படும்.


community internet booths - சமுதாய இணைய நிலையங்கள்: இலண்டனில் செயற்படும் வோர்ல்டுடெல் என்னும் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஒரு திட்டம் வகுத்துள்ளது. இதன்படி 1500 சமுதாய நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். ஐந்தாண்டுகளுக்குப் பின் இவை 1000 என்னும் அளவில் பெருகும். (1999).


compact disk, CD - A storage device using optical laser storage techniques, easy to handle, high storage capacity. Eg. Books and encyclopedia. நெருக்க வட்டு, நெவ : சேமிப்புக் கருவியமைப்பு; ஒளி லேசர் சேமிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவது, கையாளுவது. சேமிப்புத் திறன் அதிகம். எடுத்துக்காட்டு : நூல்கள், கலைக் களஞ்சியம்.


compact disk drive, CDD - நெருக்க வட்டு இயக்கி, நெவஇ.


compact disk read only memory, CDROM - படிப்பதற்குரிய நெருக்க வட்டு நினைவகம், பநெவநி : இது தகவல்களைப் பெறவும் படிக்கவும் லேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்துவது. இதில் கலைக்களஞ்சியச் செய்திகள் அனைத்தையும் அடக்கலாம். கொள்திறன். 650 GB.


compact disk writer, CDW - நெருக்க வட்டு எழுதி, நெவஎ : இது தற்பொழுது பயனில் உள்ளது. இதைக் கொண்டு பநெவநி இல் தகவல்களைச் சேமித்து, வேண்டிய பொழுது பயன்படுத்தலாம்.


compactation - A technique used for reducing the space required for data storage without losing any information content. ஒடுக்குதல் : இது ஒரு தொழில் நுட்பம், தகவல் அடக்கம் குறையாமல் தகவல் சேமிப்புக்குரிய இடத்தைக் குறைத்தல்.


comparative operator - This operator returns either true or false. ஒப்பீட்டுச் செயலி : இச்செயலி தவறு அல்லது சரி என்பதையே திருப்பும்.


comparative operator table - ஒப்பீட்டுச் செயலி அட்டவணை.

செயலி பெயர் எடுத்துக்காட்டு
= சமம் Α1=Β1
> அதிகம் Α1>Β1
< குறைவு Α1<Β1
>= மிக அதிகம் A1<=B1