பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

48

com


<> சமமின்மை A1<>B1


comparator, discriminator - An analogue circuit based on an integrated circuit. ஒப்பறிவி, பிரித்தறிவி : ஓர் ஒப்புகை மின்சுற்று. ஒருங்கிணை சுற்று அடிப்படையில் அமைந்தது.


complement notation - நிரப்புகுறிமானம் : குறி இருமியைக்கொண்டு (சைன் பிட்) கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண் நேரெண்ணா (+) எதிர்மறை எண்ணா (-) என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கணிப்பொறியில் எல்லா எண்களும் இயல்பு எண்களாகவே சேமித்து வைக்கப்படுவதில்லை. எதிர்மறை எண்கள் அவற்றின் நிரப்பு எண்களாகக் குறிக்கப்படுகின்றன. கணிப்பொறியில் நிரப்பு எண்களின் உதவியினால் கழித்தலையும் கூட்டல் போலவே இயக்கி விடை காணலாம். ஆகவே, எதிர்மறை எண்கள் அவற்றின் நிரப்பு எண்களில் குறிக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, -1010 என்னும் எண் கணிப்பொறியில் 2-இன் நிரப்பு எண்ணாகப் பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

இரும எண் 2இன் நிரப்பு எண் கணினி எண் குறிமானம்
-1010 0110 10110
+1010 - 00110

இதையே நிரப்புக் குறிமானம் என்கின்றோம்.


compiler - A programme converting a source code programme: eg. Basic. தொகுப்பி : மூலக்குறிமுறை நிகழ்நிரலை மாற்றும் நிகழ் நிரல். எடுத்துக்காட்டு : பேசிக்.


complement numbers - நிரப்பு எண்கள் : இருவகை நிரப்பு முறைகள் உள்ளன. இவை 10-இன் நிரப்பு, 9-இன் நிரப்பு எனப்படும். பதின்ம எண்ணின் அடி எண் என்பதைக் கருத்தில் கொள்க. 10இன் அடியெண் நிரப்பு என்றும் 9-இன் நிரப்பு (அடிஎண் 1) இன் நிரப்பு என்றும் பொதுவாகக் கூறப்படும். காட்டாக, 456 க் கொள்க. 4, 5, 6 ஆகியவற்றை 9-லிருந்து கழித்து எழுதுக. 456 என்னும் எண் 543 என்று ஆகும். இத்துடன் 1-ஐ கூட்டினால், இது 544 ஆகின்றது. ஆகவே, 456 என்னும் பதின்ம எண் னின் 10-இன் நிரப்பு எண் 544 ஆகும். இதே போல 87 என்னும் எண்ணின் 10-இன் நிரப்பு எண் 23 ஆகும்.


computation - கணிப்பீடு : பா. computing.


computer basic concepts - கணிப்பொறியின் அடிப்படைக் கருத்துகள் : 1) கணிப்பொறியைப் பயன்படுத்தி ஒரு சிக்கலைத் தீர்க்