பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

54

com


cessing, disadvantages of.

computer languages - கணிப்பொறி மொழிகள் : இவை உயர்நிலை மொழிகள் 1) போர்ட்ரான், 2) பேசிக், 3) கோபல், 4) விஷிவல் பாக்ஸ் புரோ, 5) விஷிவல் பேசிக், 6) விஷிவல் சி++ இவை தவிர எந்திர மொழியும், கோவை மொழியும், இதில் சேரும்.

Computer Literacy Programme - கணிப்பொறி அறிவொளித் திட்டம் : இது இணையத்தொடு இணைந்த திட்டம். 03-12-2000 அன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கணிப்பொறியைப் பயிலாத மாணவ மாணவியர்களுக்கு 60 அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

computer memory - கணிப்பொறி நினைவகம் : இது இரு வகை: 1) முதன்மை நினைவகம்: இதில் ஆர்ஏம், ஆர்ஓஎம், பிஆர்ஓம் ஆகியவை இருக்கும். 2) துணைச் சேமிப்புக் கருவியமைப்புகள்: இவற்றில் நெகிழ்வட்டு, வன்வட்டு காந்த நாடா, நெருக்க வட்டு ஆகியவை அடங்கும்.

computer networks - கணிப்பொறி வலையமைவுகள்: இவை இரண்டிற்கு மேற்பட்ட கணிப்பொறித் தொகுதிகளுக்கிடையே தகவல் தொடர்பு கொள்ள உதவுபவை. காட்டாக, ஓர் அலுவலகத்தில் பல கணிப்பொறிகளைக் கம்பிகள் மூலம் இணைத்து வலையமைவை உண்டாக்கலாம். இதற்கு ஊடகமாகப் பயன்படுவது தகவல் தொடர்பு வழியாகும். இந்த ஊடகம் பயனாளிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து, அவர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவுவது.

computer programme - கணிப்பொறி நிகழ்நிரல்: விதிமுறையைத் தெரிவிக்கும் துல்லிய குறிமானம்.

computer science - The technical study of computer working, the mathematics of their operation and the language with which we communicate with them. கணிப்பொறி அறிவியல் : கணிப்பொறி வேலைசெய்தல், அவை இயங்கும் கணித முறைமை, அவற்றுடன் நாம் கொள்ளப் பயன்படுத்தும் மொழிகள் ஆகியவை பற்றி ஆராயும் தொழில் நுட்பத்துறை.

computer usage - கணிப்பொறி வழக்காறு: கணிப்பொறித் துறையில் உருவாகியது. வியப்புக்குரியதாகவும் ஏற்பதற்குரியதாகவும் உள்ளது. எ-டு. biobreak - கழிவறை செல்லல்.