பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

55

con


computing - The process of working with numbers to solve a problem. கணித்தல் : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண எண்களைக் கையாளும் முறை.

concatenation - in string processing the synthesis of longer character strings from shorter ones. கோவையமைத்தல் : சரமுறையாக்கலில் நீண்ட உருச்சரங்களை குறுகிய சர உருக்களாகத் தொகுத்தல்.

conditional assignment operator - கட்டுப்பாட்டு ஒப்படைப்புச் செயலி.

conditional processing - This is a test process. கட்டுப்பாட்டிற்குரிய முறையாக்கல்: இது ஒரு ஆய்ந்து பார்க்கும் முறை.

configuration table - The table maintained in a computer by the operating system. It signifies the status of the individual units of the system. உருவமைவு அட்டவணை : இயக்கு தொகுதியினால் கணிப்பொறியில் பேணப்படும் அட்டவணை. இது ஒரு தொகுதியின் தனியலகுகளின் நிலையைக் குறிப்பது.

constants - Data which do not get changed for each run in a program. They are of many kinds. மாறிலிகள் : ஒரு நிகழ்நிரலில் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் மாறாத தகவல்கள் இவை. பா. C Constants.

container control - கலக் கட்டுப்பாடு : இது எல்லாக் கட்டுப்பாடுகளையும் தன் சட்டகத்தில் அடக்குவது. பொத்தான் தொகுதிகளை ஒரே தொகுதியால் உருவாக்க உதவுவது. இவை பின்வருமாறு: 1) சட்டம், 2) படம், 3) வடிவம், 4) எஸ்எஸ் தந்தி.

contents - The information stored at any address or in any register of a computer. அடக்கம் : ஒரு முகவரியில் அல்லது ஒரு கணிப்பொறியின் பதிவகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்.

continue statement - தொடர் கூற்று : இது வளையங்களில் பயன்படுவது. வளையத்தின் ஒரு பகுதியைத் தாவிச் செல்லவும் வளையத்தின் அடுத்த சுழற்சியைத் தொடரவும் பயன்படுவது. இது கட்டுப்பாட்டை வளையத்தின் அடுத்த சுழற்சிக்கு மாற்றுவது இதன் பொதுப் படிவமைப்பு. தொடர், continue;

contour analysis - A reading technique employing a rowing spot of light. The light reaches out the character's outline by bouncing its inter edges. புறக்கோட்டுப் பகுப்பு : ஒரு