பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

con

56

con


படிக்கும் நுட்பம். இதில் ஒரு நகரும் ஒளி பயன்படுகிறது. இந்த ஒளி, உருக்களின் புறக்கோட்டை அடைந்து அதன் வெளிப்புற விளிம்புகளில் குதிக்கும்.

control - A device to direct or regulate some theory: eg joystick. கட்டுப்பாடு : ஒன்றை இயக்க அல்லது ஒழுங்குபடுத்த உதவும் கருவியமைப்பு.

control, kinds of - கட்டுப்பாட்டு வகைகள்: இவை வரைகலை சார்ந்தவை: 1) படப் பெட்டிக் கட்டுப்பாடு, 2) படக் கட்டுப்பாடு, 3) வரிக்கட்டுப்பாடு, 4) வடிவக் கட்டுப்பாடு, 5) எழுச்சியூட்டும் கட்டுப்பாடு. விரிவு அவ்வப் பதிவுகளில் காண்க.

control language - The set of commands in an operating system. கட்டுப்பாட்டு மொழி : ஓர் இயக்கும் தொகுதியில் உள்ள கட்டளைத் தொகுதி.

controlling user response - பயனாளித் துலங்கலைக் கட்டுப்படுத்தல்: இது பயனாளியின் விருப்பங்களை வரையறை செய்வது. பெற வேண்டிய பொருள்களைக் கட்டுப்படுத்திப் பெறலாம்.

control panel - கட்டுப்பாட்டுப் பலகை: கணிப்பொறியுடன் இணைந்த வேறுபட்ட வன்பொருள் பகுதிகளை நிறுவவும் மேலாண்மை செய்யவும் இது நமக்கு உதவுகிறது. தொடங்கு என்பதைத் தட்டி இப்பலகையைத் திறக்கலாம்.

control, property of - கட்டுப்பாட்டுப்பண்பு: ஒவ்வொரு கட்டுப்பாட்டிற்கும் குறிப்பிட்ட ஒரு பண்புண்டு. இதற்குத் தவறு பண்பு என்று பெயர். இப்பண்பு பயன் அடிப்படையில் அமைவது. எ-டு பாடப் பெட்டிக்கு பாடப் பண்புண்டு.

controls, classification of - கட்டுப்பாடுகள் வகைப்பாடு : விஷூவல் பேசிக் தொடர்பாகவுள்ள கட்டுப்பாடுகளைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம். 1) நிலைக் கட்டுப்பாடுகள்: பொதுப் பொத்தான், குறிச்சீட்டு, சட்டக் கட்டுப்பாடுகள் இவை கருவிப் பெட்டியில் உள்ளவை, நீக்க முடியாதவை. 2) வினையுறு எக்ஸ் கட்டுப்பாடுகள்: இவை தனிக் கோப்புகளாக உள்ளவை, vbxஅல்லது ocxவிரிவு. இவை தனித்தன்மை வாய்ந்த கட்டுப்பாடுகள். 3) வழக்கக் கட்டுப்பாடுகள்: இவை செருகக் கூடிய பொருள்கள். எ-டு, சொல் ஆவணம். 4) வரிக் கட்டுப்பாடு: வரைகலையில் பயன்படுவது. 5) படப்பெட்டிக் கட்டுப்பாடு: படப்பண்பு அளிப்பது.