பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

corr

58

csi


வெளிப்புறக் கருவியிலிருந்து மற்றொன்றுக்குத் தகவல் அல்லது நிகழ்நிரல் கோப்பைப்படி எடுப்பது.

core memory - The computer memory having magnetic cores.

correcting spelling mistakes - எழுத்துப் பிழைகளைத் திருத்தல்: சொல்முறையாக்கு மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கும் ஆவணங்கள் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கும். இதற்கு ஸ்டார் எழுதியில் அகராதியும், எழுத்துப்பிழை சரிபார்க்கும் நிகழ்நிரலும் இக்கும். ஆவணத்தைத் தட்டச்சு செய்யும் பொழுது, இந்த எழுதி, எழுத்துப் பிழைகளை அடையாளங் காட்டும்.

corruption - An error in an application system. பிழைபடல் ஒரு பயன்பாட்டுத் தொகுதியால் பிழை உண்டாதல்.

CQ, Contemporary Quotient - தொழில்நுட்ப ஈவு : தொழில் துறைகளில் சிறந்து விளங்குவதற்குரிய திறங்களை அளவிடும் நுணுக்கம். கல்வித் துறையில் பயன்படும் நுண்ணறிவு ஈவு (Q) போன்றது.

creating links - இணைப்புகளை உருவாக்கல்: எச்டிஎம்எல்லின் ஒரு சிறப்பியல்பு ஆவணங்களை உருவாக்குதல் ஆகும். இணைப்பு என்பது ஆவணத்தின் ஒரு பகுதி. இதைத் தட்டி அடுத்த ஆவணத்திற்குச் செல்லலாம்.

creating a programme - நிகழ்நிரலை உருவாக்கல்: ஒரு சிறிய நிகழ்நிரலை எழுதுவது எளிது. முதலில் இதற்கு வழிமுறைப் படத்தை வரைய வேண்டும். இதிலிருந்து நிகழ்நிரலை எளிதில் எழுதலாம். இம்முறை நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தா.அதற்கு முறையான அணுகுமுறை தேவை.

cross correlator, Synchronous detector- ஒத்திசைக் கண்டறிவி.

CSI, Computer Society of India-சிஎஸ்ஐ இந்தியக் கணிப்பொறிக் கழகம்: இது சிறந்த கணிப்பொறிப் பணி செய்வது, ஆதாயமில்லாமல் அதைச் செய்வது. 1965-இல் நிறுவப்பட்டது. உறுப்பினர்கள் 19000, 61 பிரிவுகள், 79 கிளைகள், தலைமை இடம் மும்பை. நோக்கம் "என்கடன் பணி செய்து கிடப்பதே"; எல்லோரும் இன்புற்றிருப்பதே. சிஎஸ்ஐ 2000 பொருட்காட்சி சென்னை தரமணி டைடல் பூங்காவில் செப்டம்பர்-2000, 13-17 வரை நடந்தது. இதன் 35 ஆம் ஆண்டுக் கூட்டத்தோடு இணைந்து நடத்தப்பட்டது. இக்கழகம் 1979-இல் நிகழ்நிரல்