பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cur

59

cyb


திறன் தேசிய அளவைத் தேர்வை (NSTPC- National Standard Test in Programming Competence) நடத்தியது. இதுபோன்று பல நல்ல பணிகளைச் செய்து வருவது.


cursor - A movable marker on the screen of a VDU indicating where the next character will be printed. குறிப்பி : காட்சித் திரையிலுள்ள நகரும் சுட்டி அடுத்த உரு எங்கு அச்சியற்றப்படும் என்பதைக் காட்டும்.


cursor control keys - Keys for moving a character round the screen of a VDU using the keyboard arrows up, down, right and left. குறிப்பிக் கட்டுப்பாட்டுத் திறவுகள் : காட்சித் திரையைச் சுற்றி ஓர் உரு நகர்வதற்குரிய திறவுகள். விசைப் பலகை அம்புக் குறிகளை மேல், கீழ், வலம், இடம் எனப் பயன்படுத்தும்.


customising - பயனுக்கேற்ப அமைத்தல் : பயனாளியின் வசதிக்கேற்ப ஒன்றைச் செய்தல். எடுத்துக்காட்டு : பணிப்பட்டை என்பது மேசை அடியில் இருப்பது. இதை மேசையின் நான்கு பக்கங்களில் ஏதாவது ஒன்றிற்கு எளிதாக நகர்த்தலாம்.


custom software - user's software - பயனாளி மென்பொருள்.


cut and paste - வெட்டி ஒட்டல் : சொல் முறையாக்கும் தொகுதியின் பதிப்புப் பணி. இதில் பாடப் பகுதி தொடக்கத்திலும் முடிவிலும் குறிப்பிட்ட உருவினால் குறிக்கப்படும். பின் அதே பாடத்தில் வேறு ஓர் இடத்திற்கு அது படிமாற்றம் செய்யப்படும்.


cyber - computer : கணிப்பொறி.


cyber attack - கணிப்பொறித் தாக்குதல் : இது 1997 ஏப்ரலில் அமெரிக்காவில் நடைபெற்றது. 26000க்கு மேற்பட்ட பாதுகாப்புத் துறை கணிப்பொறிகள் இத்தாக்குதலுக்கு உள்ளாயின. ஒருவாறு இது நிறுத்தப்பட்டது.


cyber career centre - கணிப்பொறி வாழ்க்கைத் தொழில் மையம் : இது தனியார் கணிப்பொறி நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் நடத்துவது. இத்தொழிலுக்கு நல்ல எதிர்கால வாய்ப்புள்ளது. புதுப்புது கணிப்பொறி முறைகள் , மொழிகள், நுட்பங்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளன.


cyber guide - கணிப்பொறி வழிகாட்டி : கணிப்பொறி வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவது. எ-டு இணையம், மின் வணிகம்.


cyber future - கணிப்பொறியின் எதிர்காலம் : நன்மை ஒரு பக்கம் இருந்தாலும் தீமையும்