பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cyb

60

cyb


மற்றொரு பக்கம் உள்ளது. தவறுதலாகப் பயன்படுத்துவதே தீமை, இதைத் தவிர்க்கக் கணிப்பொறிக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று கூறலாம்.

cyber land - கணிப்பொறி உலகம் : பல காரணிகளினால் செல்வாக்குள்ள உலகு. பாப் பண்பாடு, நூல்கள், திரைப்படங்கள் முதலியவை இக்காரணிகள்.

cyber laws - கணிப்பொறிச் சட்டங்கள் : கணிப்பொறித் துறையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க ஐ.நா. வினால் 1997-ல் உருவாக்கப்பட்டவை. உலகின் பல நாடுகளும் ஒரு முன்மாதிரியாக பயன்படத்தக்க அளவுக்கு அமைந்துள்ளது. இந்தியா இதைப் பின்பற்றித் தன் தகவல்தொழில் நுட்பவியல்ச் சட்டத்தை வகுத்துள்ளது (TT ACT 2000).

cybernation - Manufacture by means of computer. கணிப்பொறி உற்பத்தி : கணிப்பொறி வழி பொருள்களை உருவாக்குதல்.

cybernetics - The study of how communications and control systems can be combined to simulate human functions. கணிப்பொறிவழி இயல் : கட்டுப்பாட்டுத் தொகுதிகளையும் தகவல் தொடர்புகளையும் இணைத்து, மனித வேலைகளை எவ்வாறு பகர்ப்பு செய்யலாம் என்பதை ஆராயும் தொழில் நுட்பத்துறை.

cyber phobia - கணிப்பொறி அச்சம்: கணிப்பொறியைக் கண்டாலே கடும் அச்சம்.

cyber poron - கணிப்பொறி இழிசுவை : 1995இல் டயம் என்னும் ஆங்கில இதழ் இணையத்தில் நடைபெறும் பாலியல் தொடர்பாகக் காட்டபெறும் இழிசுவைகளைப் பற்றி விரிவாக எழுதி, இவையே அதில் முனைப்பாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. கணிப்பொறி அல்லது இணையக் குற்றங்களில் இதுவும் ஒன்று. பா. Internet crimes.

cyber punk - A genre of science function. கணிப்பொறிக்கதை : அறிவியல் கதை வகை.

cyber slang - கணிப்பொறி கொச்சை மொழி: கணிப்பொறி தொடர்பாகப் பயன்படும் பொருள் வேறுபாடுள்ள சொற்கள். எ-டு மின்னஞ்சல் - பார்க்கும் அஞ்சல்.

cyber space - கணிப்பொறி வெளி : வானவெளிபோன்று பரந்த உலகம். இதற்கு நாடு வழிப்பட்ட எல்லைகள் இல்லை. ஆகவே, சிக்கல்களும் நிரம்ப உண்டு.