பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data

62

data


symbols etc. தகவல் : தரவு. முறையாக்கக் கூடிய அல்லது தெரிவிக்கக் கூடிய செய்தி. எ-டு உண்மைகள், புள்ளிவிவரங்கள், குறிகள் முதலியவை.

data bank - A collection of data stored in a computer system. தகவல் வங்கி : ஒரு கணிப்பொறித் தொகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் திரட்டு.

data base - A collection of related data stored in a computer. It has indexed references: eg. subject headings, keywords and phrases. தகவல்தளம் : தொடர்புடைய தகவல்திரட்டு, கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது. இது குறிப்பிட்ட குறிப்புதவிகளைக் கொண்டது. எ-டு பொருள் தலைப்புகள், திறவுச் சொற்கள், சொற்றொடர்கள்.

data base connection - தகவல் தள இணைப்பு: விஷீவல் பேசிக்கில் மூன்று தகவல் அணுக்க இடைமுகங்கள் உள்ளன. அவையாவன: 1) விசையுறு எக்ஸ் தகவல் பொருள்கள் (ADO) 2) தொலைத் தகவல் பொருள்கள் (RDO) 3) தகவல் அணுக்கப்பொருள்கள் (DAO).

data base management systems (DBMS), basic concepts of - தகவல் தள மேலாண்மை முறையின் (டிபிஎம்எஸ்) அடிப்படைக் கருத்துகள் : டிபிஎம்எஸ் என்பது ஒரு நிகழ்நிரல் அல்லது நிகழ்நிரல் திரட்டு. இதைப் பலரும் தகவலுக்காகப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், மாற்றிய மைக்கலாம். எளிய மற்றும் சிக்கலான வேண்டுகோள்களையும் அமைக்கலாம். இவற்றை எல்லாம் கொண்டு தெரிவு செய்த பதிவுருக்களின் பணியை மேற்கொள்ளலாம். பெரிய தகவல் தளங்களிலிருந்து விரைவாகத் தகவல்களை மீட்கவும் அணுகவும் இயலும். இதுவே இதன் பெருநன்மை. இதன் ஆற்றலுள்ள வன்பொருள் இயங்கும் பொழுது, பெரிய தகவல் தளத்திலிருந்து வினாடிகளில் ஒரு சிறு தகவலைக் கூடப் பெறலாம். இதிலுள்ள பணிகள் மூவகை: 1) தகவல் தளத்தில் தகவலைப் பதிதல், 2) இத்தளத்தில் பதிவுருக்களைப் பதிவு செய்தல், 3) தகவல் உட்பகுதிகளை அல்லது கணங்களைப் பெறுதல்.

data base, manipulation of - தகவல் தளத்தைக் கையாளல் : இதைப் பின்வரும் வழிகளில் கையாளலாம்.

1) தேடல், 2) பிரித்தல், 3) இணைத்தல், 4) தகவல் கணக்கீடுகள் செய்தல், 5) வடிகட்டல், 6) தகவல் தளத்தைப் பதிப்பதித்தல், 7) அறிக்கை இயற்றல்