பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data

63

data


data base querying - தகவல் தள வினா : ஒவ்வொரு தகவல் தள மேலாண்மை முறையும் நிகழ்நிரல் மொழியை ஒத்த மொழி ஒன்றை அரவணைக்கிறது. இம்மொழிக்கு கட்டமைப்பு வினா மொழி, கவிமொ என்று பெயர். ஆங்கிலத்திற்கு மிக நெருக்கமான கூற்றுகளைப் பயன்படுத்தித் தகவல் தளத்துடன் தொடர்பு கொள்வதற்குகாக இது சிறப்பாக அமைக்கப்பட்டது. இம்மொழி மூலம் பின்வருவனவற்றைச் செய்யலாம்: 1) பதிவுருக்களை இடங்காணத் தகவல் தளத்தைத் தேடல், 2) பதிவுருக்களை மேம்படுத்த அட்டவணைகளுக்கிடையே இணைப்புகளை நிறுவுதல், 3) பதிவுருக்ககளின் துணைத் தொகுதிப் பட்டியலைத் தேடுதல், 4) கணக்கீடுகள் செய்தல், 5) பழைய பதிவுருக்களை நீக்கல், 6) பிற தகவல் மேலாண்மைப் பணிகளைச் செய்தல். ஓர் அட்டவணையிலுள்ள தகவலின் சிறப்புக் கருத்துகளாக வினாக்களைக் கருதலாம். இவ்வினாவிலிருந்து பெறும் முடிவை எப்பொழுதும் தனியாகச் சேமித்து வைத்து வேண்டிய பொழுது காணலாம்.

data base types - தகவல் வகைகள் : கருத்தமைப்பு அடிப்படையில் இத்தளத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

1) தட்டைக் கோப்புத் தகவல் தளம்: இதில் தனித்தகவல் அட்டவணை இருக்கும். தனியாளோ குழுவோ இதைப் பயன்படுத்தலாம். முகவரிப் பட்டியல்கள், பொருள் பட்டியல்கள் பேணப் பயன்படுவது. சிக்கலான தகவல்களை இதில் பெற இயலாது.

2) தொடர்பு நிலைத் தகவல் தளம்: இதில் ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ள அட்டவணைகள் தொகுதியாக அமைந்திருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளில் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட புலங்கள் அட்டவணைகளுக்கிடையே ஒரு தொடர்பை உருவாக்கும். பொதுப்புலங்கள் திறவுகள் (கீஸ்) எனப்படும். இதுவே இன்று தொழில்துறையில் அதிகம் பயன்படுவது.

3) படிநிலைத் தகவல்தளம் : முதலில் இது முதன்மைக் கணிப்பொறிகளில் பயன்பட்டது. இதில் பதிவுருக்கள் மரம் போன்ற அமைப்பில் உருவாக்கப்படும். பதிவுரு வகைகளுக்கு இடையே உள்ள உறவு தாய்-சேய் உறவு போன்றது.இந்த உறவில் ஒரு குழந்தைவகை ஒரு தனித்தாய் வகையோடு உறவுகொள்ளும்.

4) வலையமைவுத் தகவல் தளம்: இது படிநிலைத் தகவல் தளத்தை ஒத்தது. வேறுபாடு இதுவே. ஒரு பதிவுருவகை ஏனைய