பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data

65

data


நிரப்பு அறையில் சேமிக்கப் பட்டிருக்கும் மடிப்பிகள், அறைகள் ஆகியவற்றிலுள்ள குறிப்புச் சீட்டுகள் நாம் விரும்புவதை எடுக்க உதவும். இதற்கு விண்டோஸ்-98 நன்கு உதவுகிறது.

data processing - The acquisition, recording and manipulation of data by means of a computer. This process involves data collection, verification, validation and report generation. தகவல் முறையாக்கல் : தரவுச் செயலாக்கம். கணிப்பொறியினால் தகவல்களை ஈட்டல், பதிதல், கையாளல் ஆகியவற்றைச் செய்தல். இம்முறையிலுள்ள செயல்களாவன. 1) தகவல் திரட்டல், 2) சரிபார்த்தல், 3) செல்லத்தக்கதாக்கல், 4) அறிக்கை உருவாக்கல்.

data processing computerised, advantages - பா. computerised data processing, advantages of.

data processing, kinds of - தகவல் முறையாக்கல் வகைகள் : இது இருவகை 1) கை வழி முறையாக்கல்: கையால் தகவல்களைத் தொகுத்தல் எ-டு வகுப்பாசிரியர் தேர்ச்சி அறிக்கை தயாரித்தல்.

2) கணிப்பொறிவழி முறையாக்கல்: தகவல்களைக் கணிப்பொறியில் செலுத்தித் தொகுத்தல். எ-டு அரசுத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள்.

data processing manual, disadvantages of - கைவழித் தகவல் முறையாக்கலின் தீமைகள்:

1) துல்லியம் பயனுறுதிறன் குறைவு.

2) கைவழி முறைகளுக்கு அதிக நேரமாகும்.

3) மனித முயற்சி கணிப்பீட்டுப் பிழைகளைச் செய்ய வல்லது. 612 ஐ 621 என்று எழுதுவதற்கு வாய்ப்புள்ளது.

4) தாள் பதிவேடுகளில் தகவல்களை எழுதுவதால் அவை பருமனில் அதிகமாகிப் பேணுவதற்கு இடராக இருக்கும்.

5) திருத்தம், மாற்றம் ஆகியவற்றைச் செய்தல் கடினம்.

data representation - தகவல்களைக் குறித்தல் : இதில் பின் வருவன அடங்கும்: 1) இருமிகள், எண் இருமிகள், 2) இரும எண்கள், 3) பதின் அறும எண்கள், 4) நிகர் சரிபார்ப்பு இருமி.

data retrieval - The selection and extraction of data from a data base thro a keyboard connected to a computer. தகவல் மீட்பு : தகவல் தளத்திலிருந்து தகவலைப் பிரித்தலும் தெரிவு செய்தலும், கணிப்பொறியுடன் இணைக்கப்பட்ட விசைப் பலகையால் இது நடைபெறுகிறது.