பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

desk

71

desk


லுள்ள துளை; தகவலின் இயல்பைக் காட்டுவது. வேறு பெயர்கள்: கட்டுப்பாட்டுத் துளை, கட்டுப்பாட்டுப் பொத்தல், தகவல் பெயர்த்துளை, வேலைத் துளை.

desktop computer-A unit with physical dimensions fitting conveniently on a desktop. மேசைக் கணிப்பொறி : மேசையில் வசதியாக அமையும் பரு மன்களைக் கொண்ட அலகு.

desk top publishing, DTP - மேசை வெளியிடல், டிடிபி: நுண்முறையாக்கிப் பயனுக்குரிய மென்பொருள். இம் முறையாக்கி பாடத்தைக் கையாள்வது. இதில் எழுத்தளவு, நுண்மையாக நெருக்கிச் செய் தல், பத்தியமைப்பு, வரை கலை முதலியவை கட்டுப்படுத் தப்படும். இதைச் செய்யச் சுட்டெலியும் விண்டோசும் உதவும். இதில் அலகிடும் உரு முறையாக்கி இருக்கும். இது பக்க வண்ணனை மொழிக்கு இணையானது. உண்டாகும் வெளிப்பலன் லேசர் அச்சியற்றியை இயக்கி அச்சுப்படியை அளிக்கும். இதை நன்கு திருத்தம் செய்து முடிவாக எடுக்கப்படும் அச்சுப்படி அச்சிட வேண்டிய செய்திகளுக்கு மூலமாக அமையும். இம்மூலம் படலத்தில் படிஎடுக்கப் பட்டு அச்சுக்கு அனுப்பப்படும்.

desktop publishing, benefits of - டிடிபியின் நன்மைகள்: 1)ஒரு புதிய தொழில்நுட்பம். வெறுபெயர் ஒளியச்சுக் கோவை. 2)கையால் அச்சுக் கோப்பதை விட மூன்று மடங்கு அதிக மாகத்தட்டச்சு செய்யலாம். 3)அச்சு மிகத் தெளிவாக இருக்கும். 4)முதலில் ஒரு புள்ளி எழுத்தில் தட்டச்சு செய்து பிறகு வேண்டிய புள்ளி எழுத்துகளுக்கு மாற்றலாம். 5)வேண்டியவாறு வடிவ மைப்பு செய்யலாம். 6)திருத்தம் செய்வது எளிது. 7)ஒருபக்கத்தில் இருக்கும் செய்தியை வேறு பக்கத்திற்குச் கொண்டு செல்வது எளிது. 8)புத்தக வேலைகளை மிக விரைவாக முடிக்கலாம். 9)தட்டச்சு செய்து படி எடுத்த செய்திகளை எதிர்காலப் பயனுக்கு சேமித்துவைத்துக் கொள்ளலாம். 10)திருத்தங்களைத் திரையிலேயே படித்துச் செய்யலாம். 11)அனைத்துச் சில்லறை வேலைகளையும் அழகாகச் செய்யலாம். 12)அச்சுத் தொழில்நுட்ப இயலில் ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தி வருகிறது.

desk top publishing, definition of - டிடிபி இலக்கணம்: வசதியான மேசையில் கணிப்பொறியை வைத்து வேண்டிய