பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

desk

72

dia


தகவல்களைத் தட்டச்சு செய்து அச்சுப்படி எடுத்தல்.

Desktop short circuits -மேசைக் குறுக்கு வழிகள் : விண்டோசிலுள்ள ஆராய்வி மூலம் இவற்றை உருவாக் கலாம். -

Desktop, structure of -மேசை அமைப்பு : விண்டோஸ்-98-இல் அடிப்படை வேலை செய்யும் மேடை மேசையே. இதில் எல்லா நிகழ்நிரல்களும் உள்ளன. சுட்டெலியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைப் பெறலாம். இம்மேசையில் பல நுண்படங்கள் உள்ளன. இவை பயன்பாடு களைக் குறிப்பவை. ஒவ்வொரு படமும் ஒரு குறியத்தைக் கொண்டிருக்கும். இக்குறியம் பயன்பாட்டின் பெயரைக் குறிக்கும். எ-டு என் கணிப் பொறி, மீள்சுழற்சிக் குதிரகம், இணைய ஆராய்வி. தவிர இதிலுள்ள் பிற பகுதிகளாவன: 1) பணிச்சட்டம் 2) தொடங்கு பொத்தான் 3) தொடங்கு பட்டி 4) விரைவு பணிச்சட்டம் 5) அமைப்புத் தட்டு 6) பணி அட்டவண்ணப் படுத்தி.

Device - The computer component or computer itself. கருவியமைப்பு: கணிப் பொறிப் பகுதி அல்லது கணிப்ப்ொறி. DHTML - டிஎச்டிஎம்எல்:இது தனிச்சொல் ஒட்டுகளை அளித்து எழுதுமொழிகளைப் பயன்படுத்துவது.

Diagnosis -To locate errors in software or failures in hardWafe, குறையறிதல்:மென்பொருளில் பிழைகளையும் வன்பொருளில் தவறுகளையும் கண்டறிதல்.

Diagnostic test -The use of a special programme to identify and isolate failures in a computer-குறையறிஆய்வு :ஒரு கணிப் பொறியில் தவறுகளை அடையாளங்கண்டு பிரித்தறியத் தனி நிகழ்நிரலைப் பயன்படுத்தல்.

Dialect -Variations in the syntax of a particular computer language.-கிளை மொழி :ஒரு குறிப்பிட்ட கணிப்பொறி மொழியின் தொடரியலில் உள்ள வேறுபாடுகள்.

Dialog, box -உரையாடல் பெட்டி :இது விண்டோசில் பயன்படுகிறது. தகவலைத் திரையில் காட்டுகிறது. மற்றும் துலங்கலைத் தட்டச்சு செய் வது அல்லது தெரிவுப் பட்டியலிருந்து தேர்ந்தெடுப்பது. இப்பெட்டியிலுள்ள கட்டுப் பாடுகள் பின்வருமாறு: 1) பாடப்பெட்டி, 2) பட்டிப் பெட்டி, 3) கீழிறக்கும் பட்டிப் பெட்டி, 4) வானொலிப்