பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dire

75

dith


அமைப்பின் இன்றியமையாப் பகுதி. கணிப்பொறியின் உள் மூலங்களோடு நேரடி கட்டுப் பாடு உடையது.

Directory -List of files on a computer storage medium for user's easy reference. Also known as catalogue. கோப்படைவு :கணிப்பொறிச் சேமிப்பு ஊடகத்திலுள்ள கோப்புகளின் பட்டியல். வேறு பெயர் பட்டியல்.

Disk -A rotating circular plate having a magnetizable surface to store data. வட்டு :உருளும் வட்டத் தட்டு. தகவல்கலைச் சேமிக்கக் காந்த மேற்பரப்புண்டு.

Disk drive -A device to rotate magnetic disk and access its data by means of a read/write head. வட்டு இயக்கி : படிக்கும்/எழுதும் தலையினால் காந்த வட்டை உருட்டித்த தகவலை அணுக்கம் கொள்ளுமாறு செய்யும் கருவியமைப்பு.

Disk operating system,DOS -An operating system using disk for its secondary storage medium. வட்டு இயக்கு அமைப்பு, வஇஅ, டிஒஸ்: வட்டு தன் இரண்டாம் நிலைச் சேமிப்புக்காக வட்டைப் பயன்படுத்தும் இயக்கு அமைப்பு.

Disk storage -An external computer storage device. வட்டுச் சேமிப்பு: கணிப் பொறியின் புறத்தே உள்ள சேமிப்புக் கருவியமைப்பு.

Display -An output device: e.g SCreen. -காட்சிக் கருவி : வெளிப்பலன் கருவியமைப்பு. எ-டு திரை.

Displaying control -An interface unit used to connect a number of visual display units to a central processor. காட்சிக் கட்டுப்பாடு :இடை முக அலகு. மைய முறையாக்கியுடன் பல காட்சிக் கருவிகளையும் இணைக்கப் பயன் படுவது.

Distributed control system -A collection of modules each with its own specific function. பகிர்வுக் கட்டுப்பாடு அமைப்பு :அலகுத் தொகுப்பு. ஒவ்வொரு அலகும் அதற்குரிய குறிப்பிட்ட வேலையைச் செய்யும்.

Disturbance -An undesired common signal in a control system.அலைக்கழிவு : ஒரு கட்டுப் பாட்டுத் தொகுதியில் உள்ள தேவையற்ற பொதுக்குறிகை.

Dithering -நிறச்சேர்க்கை:அடுத்தடுத்துள்ள வேறுபட்ட நிறப்புள்ளிகளைச் சேர்த்துப்பயன்படுத்தல். இவை மீண்டும் வேறு ஒரு தனித்தோற்ற நிறத்தை உருவாக்கும். இது நிறக்-