பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

doc

76

dot


காட்சித் திரையில் அமையும்.பா. colour usage.

Document -1) Any form containing details of some transcation 2) A writtern text and charts describing the purpose,nature,usage and operation of a programme. ஆவணம் :1) ஒரு நடவடிக்கையின் விவரங்களைக் கொண்டுள்ள படிவம். 2) எழுதிய பாடமும் படங்களும் ஒரு நிகழ்நிரலின் இயக்கம், பயன், இயல்பு, நோக்கம் ஆகிய வற்றை விளக்கல்.

Document,adding attraction to-ஆவணத்திற்குக் கவர்ச்சி யளித்தல் : 1) நிறம், 2) படம், 3) கரை.

Documentation -A set of instructions supplied with a computer explaining how to operate the computer. ஆவணமாக்கல் : ஒரு கணிப் பொறிக்கு அளிக்கப்பட்ட கட்டளைக் குறிப்புகள் தொகுதி. இது கணிப்பொறியை இயக்குவது எவ்வாறு என்பதை விளக்குவது.

Document, features of -ஆவணச் சிறப்பியல்புகள்:1) வண்ணமிடல், 2) படம் சேர்த்தல், 3) பாடஇயைபு, 4 ஆவணங்களை இணைத்தல்.

Document file -ஆவண்க்கோப்பு:பயன்பாட்டு அடிப்படையில் பயனாளியால் உருவாக்கப்படுவது.

Domain name -புலப்பெயர்: இது ஒரு குறிசீட்டு. இணையத்தில் ஒரு கணிப்பொறியை இனங்காண உருவாக்கப்பட்டது.

Domain name system -புலப்பெயர்முறை: கணிப்பொறிகளைப் பெயரிடும் சீட்டுகளை ஐபி எண்களோடு இயைபு படுத்த அமைந்த படிநிலை வரிசையே இப்பெயர்.

Domain-tip memory, DOT -The computer memory in which presence or absence of a magnetic domain in a localised region of a thin magnetic film designates 1 or 0.Otherwise known as magnetic domain memory. புலமுனை நினைவகம், டிஓடி: இது கணிப்பொறி நினைவகம். இதில் ஒரு மெல்லிய காந்தப் படலத்தின் பகுதியில் காந்தப்புலம் இருப்பதும் இல்லாததும் 1, 0 என்பவற்றைச் குறிக்கும். வேறுபெயர் காந்தப்புல நினைவகம்.

Dot matrix printer -A printer using a printhead. This head forms the shape of characters as a matrix of small dots. புள்ளி அணி அச்சியற்றி: அச்சுத்தலையைப் பயன் படுத்தும் அச்சியற்றி. சிறு புள்ளிகள் கொண்ட ஓர் அணியாக் இத்தலை உருக்கள்