பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

dyn

80

echo


சேமிப்பு. இக்கூறுகள் தொடர்ச்சியாக ஒழுங்கான இடைவேளைகளில் மீள் மின்னேற்றம் செய்யப்பட வேண்டும்.

dynaturtle - The dynamic cursor used to produce graphics. இயக்க ஆமை : வரைகலையை உண்டாக்கப் பயன்படும் இயக்கக் குறிப்பி.


E

EAM, Electrical Accounting Machines - ஈஏஎம் : மின் கணக்கிடும் எந்திரங்கள்.

EAROM, Electrically Alterable Read Only Memory - ஈரோம் : படிப்பதற்குரிய மின்மாற்று நினைவக வகை. தனிமின் சுற்றுகளைக் கொண்டு எப்பொழுதும் இதற்குத் தகவல் எழுத இயலும்.

EBAM - ஈபம் : மின்னணுக் கற்றை நினைவகம்.

EBCDIC - எப்க்டிக் : தகவல் தொடர்புக் குறிமுறை. இதில் 256 தனித்த உருக்குறிமுறைகளை உண்டாக்க 8 தகவல் இருமிகள் பயன்படுகின்றன.

EBR - ஈபிஆர் : மின்னணுக்கற்றைப் பதிவு.

e-business, e-biz - மின் தொழில் : மின் வணிகம். இணையத்தின் நன்மைகளில் ஒன்று.

e-cash - மின்பணம்: எண்பணம் அவ்வளவு எளிதில் நடைமுறைக்கு வருவதற்கில்லை. பல சிக்கல்களை எழுப்புவது. வங்கி வல்லுநர்கள், பொறியியல் வல்லுநர்கள் ஆகியோரின் அறிவுரைகளை ஏற்றே, இதற்குச் சட்ட ஒப்புதல் அளிக்க வேண்டும். சிக்கல் முதன்மையாக கருதவேண்டுவது மோசடி. குறிப்பாக அன்னியச் செலாவணி. பா. Internet.

echo - எதிரொலி : செலுத்திய குறிகை மீண்டும் மூலத்திற்கு வருதல். இதிலுள்ள தாமதம் இது ஒரு மறிப்பு என்பதைக் காட்டும்.

echo check - எதிரொலிச் சரிபார்ப்பு : செலுத்துகையின் துல்லியத்தைச் சரிபார்க்கும் முறை. இதில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதன் மூலத்திற்கே தகவல் திருப்பி அனுப்பப்படும். திரையிலிருந்து இது முதலில் பெறுவிக்குச் சென்று பின் மீண்டும் திரைக்கு வரும். இதனால் துல்லியம் சரி பார்க்கப்படுகிறது.

echoplex technique - எதிரொலிப்பகுதி நுட்பம் : இந்நுணுக்கம் முழு இருபகுதி கம்பிகள் கொண்ட தகவல் தொடர்பு அமைப்பிலுள்ள பிழைகளைக் கண்டறியப் பயன்படுவது. விசைப் பலகையில் ஓர் உரு, தட்டச்சு செய்யப்படும் பொழுது, அது குறி