பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eff

84

ele


effective instruction - The instruction carried out as a result of altering a basic instruction during programme modification.
பயனுறு கட்டளைக் குறிப்பு : நிகழ்நிரல் மாற்றத்தின் பொழுது அடிப்படைக் கட்டளைக் குறிப்பை மாற்றுவதால் உண்டாவது.

effective memory address - The memory address computed by information provided in a programme instruction.
பயனுறு நினைவக முகவரி: ஒரு நிகழ்நிரல் கட்டளைக் குறிப்பில் அளிக்கப்பட்ட செய்தியினைக் கணிக்கப்படுவது இது.

effective time - பயனுறு நேரம் : கணிப்பொறி இயங்கும் பொழுது, அதைப் பயனுள்ள வேலைக்குப் பயன்படுத்தும் நேரம். இதன் விளைவுகள்: 1. ஆக்கநேரம். 2. நிகழ்நிரல் வளர்ச்சிக் காலம். 3. விளக்க நேரம். 4. பயிற்சி.

EGA, Enhanced Graphic Adaptor ஈஜிஏ : உயர்வாக்கிய வரைகலை ஏற்பி. தனியாள் கணிப்பொறியில் கூடுதலாக உள்ள நினைவகம்.

ego-surfacing - தன்னைத் தேடல்: ஒருவர் தன் பெயரை இணையத்தில் தேடுதல்.

e-governance - மின்னாட்சி : அன்றாட அரசியல் அலுவலில் சான்றிதழ் வழங்கல், வரிகட்டல் முதலியவை எளிதாகவும் நம்பகமாகவும் விரைவாகவும் நடைபெற உதவுவது. பலருக்கு வேலை அளிக்கலாம். அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாடு அரசு தற்போது 50 தாலுக்காக்களில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. 2001-க்குள் 156 தாலுக்காக்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.

e-health - மின்னலம் : மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டு உடல்நலம் பேணல்.

eight bit - எண்மி : சொல் அளவு எட்டு துண்மிகளைக் கொண்டது. பா. bit.

elapsed time - The total apparent time taken by a process as measured by the time between the apparent beginning and the apparent end of the process.
கழிநேரம் : ஒரு செயலினால் எடுத்துக் கொள்ளப்படும் மொத்தத் தோற்ற நேரம். செயலின் தோற்றத் தொடக்கத்திற்கும் தோற்ற முடிவிற்கும் இடையே நிகழும் நேரத்தால் அளக்கப்படுவது.

electron beam memory - The memory using a high resolution electron beam to store information. மின்னணுக்கற்றை நினைவகம் :