பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

entry

89

equ

entry - 1) The address of the first instruction in a programme to be obeyed, 2) A unit of information either input or output. பதிவு : 1. ஒரு நிகழ்நிரலில் நடைபெற வேண்டிய முதல் கட்டளையின் முகவரி, 2. தகவல் அலகு உட்பலன் அல்லது வெளிப்பலன். வேறு பெயர் பதிவுமுனை.

entry instruction - The instruction obeyed when entry is first made to a routine. பதிவுக்கட்டளை : ஓர் வழக்க மான செயலுக்கு முதலில் செய்யப்படும் பதிவு. இது கட்டளையாக நடைபெறுவது.

environment division - The section of a programme written in COBOL defining the hardware and files to be used by the programme. சூழல் பிரிவு : கோபல் மொழி யில் எழுதப்படும் நிகழ்நிரலின் பகுதி. நிகழ்நிரலால் பயன் படுத்தப்படும். வன்பொருளை யும் கோப்புகளையும் வரை யறை செய்வது.

EPROM - ஈப்ரோம் : படிப்பதற்கு மட்டும் உள்ள நினை வகம், அழிக்கக்கூடியது, நிகழ் நிரலாக்கக் கூடியது. வரம்பில் அணுக்க நினைவகத்திற்கு எதிரானது.

equality unit - சம அலகு : இரு எண்களை உட்பலனாக ஏற்றுக் கொள்ளும் கருவி யமைப்பு. இவ்விரு எண்கள் சமமானால் 1 என்றும் வெளிப் பலன் குறிகையையும், சம மில்லை என்றால் 0 என்னும் குறிகையையும் காட்டும்.

equation solver - சமன் பாட்டுத் தீர்வி : இது ஓர் எந்தி ரம். ஒருபடித்தான சமன்பாடு முறைகளைத் தீர்க்கப் பயன் படுவது.

equivalence binary digit - சமான இரும எண் : ஒரு தொகுதிப் பண்பியல்புகளின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு தனி இரும எண்ணால் குறிக்கத் தேவைப்படும் இருமிகளின் எண்ணிக்கை: எ-டு 26 கூறு களைக் கொண்ட நெடுங் கணக்கின் ஒவ்வொரு எழுத் தையும் குறிக்க 5 இருமிகள் தேவை. ஏனெனில், இருமக் குறிமானத்தில் 26 என்பது 11010.

equivalence element - A logic element in which the relationship between two binary input signals is defined by the equivalence operation. சமான கூறு : முறைமைக் கூறு. இதில் இரும உட்பலன் குறி கைகளுக்கிடையே உள்ள தொடர்பு சமான இயக்கத்தால் வரையறை செய்யப்படுவது.

equivalence operation - A Boolean operation in two operands.