பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ESDI

91

exc


ESDI, Enhanced Small Device Interface - ஈஎஸ்டிஐ : உயர்வாக்கிய சிறு கருவியமைப்பு இடைமுகம். கணிப் பொறியிலுள்ள கடின இயக்கி வகை.

even parity check - A parity check where the number of ones (zeros) in a group of binary digits is expected to be even. இருமைச் சமன் கட்டுப்பாடு : இக்கட்டுப்பாட்டில் இரும எண் தொகுதியிலுள்ள ஒன்றுகளின் (சுழிகள்) எண்ணிக்கை சமமாக இருக்கும்.

event - A processing action altering data files. நிகழ்வு : தகவல் கோப்புகளை மாற்றும் முறையாக்கும் செயல்.

events, kinds of - நிகழ்வுகளின் வகைகள் : இவை சாளர இயங்கு தொகுதியின் ஒருங்கிணைந்த பகுதிகள். அரிய பயன்பாடுகளை உருவாக்க உதவுபவை. இவை சுட்டெலி நிகழ்வுகள், அமைப்பு நிகழ்வுகள், விசைப்பலகை நிகழ்வுகள், சுமை நிகழ்வுகள், பயனாளி நிகழ்வுகள் எனப் பல வகை.

event triggering - நிகழ்வுகள் தூண்டல் : விஷூவல் பேசிக் பயன்பாட்டில் இரு வேறுபட்ட விசை நிகழ்வுகள் உள்ளன. முதல்வகை பயனாளி நிகழ்வு. இதைப் பயனாளி பயன்படுத்துவார். இரண்டாம் வகை அமைப்பு நிகழ்வு. இதில் அடங்குவன: 1. நேரங்குறிப்பியின் செயல்கள். 2. தகவல் அணுக்கப் பிழைகள். 3. படிவ நிலை மாற்றங்கள். 4. கட்டுப்பாட்டு நிலை மாற்றங்கள். இந்நிகழ்வுத் தூண்டல் ஒரு நிகழ்நிரலிலுள்ள அனைத்துச் செயல்களையுங் கட்டுப்படுத்துகிறது.

exception principle system - The system reporting only those results different from predesignated results. விலக்குநெறிமுறை : முன்னரே தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ள முடிவுகளிலிருந்து வேறுபட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் முறை.

exchange - The interchange of contents between two locations. பரிமாற்று : இரு இடங்களுக்கிடையே உள்ளடக்கங்களை மாற்றிக் கொள்ளுதல்.

exchangeable disk store - A backing store device in the device magnetic disks are loaded into a disk transport, eg. a capsule having 6 disks. மாற்றுவட்டுச் சேமகம் : தாங்கு சேமகக் கருவியமைப்பு. இதில் வட்டுப் போக்குவரத்துப் பொறிநுட்பத்தில் காந்தவட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும்.