பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மைச் சுற்றுகள். எ-டு சிறு கணிப்பொறி, நுண்கணிப் பொறி.

extract - The removal of a selected part from an item of information.

பிரிபகுதி : ஒரு செய்தி இனத் திலிருந்து தெரிவு செய்த பகுதியை நீக்குதல்.

extract instruction - பிரி பகுதிக்கட்டளை : ஒரு செய்தி இனத்தின் தெரிவு செய்த பகுதிகளை ஒரு தனிப்பட்ட இடமாக வைக்கும் கட்டளை.

e- zines in Tamil - தமிழ் மின் இதழ்கள் : சிறியவையும் பெரியவையுமான தமிழ் இடையத் தளங்கள் (வெப் சைட்ஸ்) 1000 உள்ளன. தமிழ் இடைய அடைவுகள் மூன்று உள்ளன. கணியன் தமிழ்ச் செய்தி தொடங்கி நின்று விட்டது. பிற இதழ்களாவன. தமிழ்நாளிதழ், சினிமாதிரைப் படம். அருள்-ஆன்மீகம், மாணவன் மாணவன் இதழ், வெப் உலகம். இவற்றில் முதல் நான்கு சிங்கப்பூரைச் சார்ந்தது. ஐந்தாவது சென்னையில் நடத்தப் பெறுவது.

F

face - The side bearing the printing of a punched card like the card face.

முகம் : பொத்தலிட்ட அட்டையின் அச்சு தாங்கு பக்கம். அட்டை முகத்தைப் போன்றது.

face attribute - முகஇயல்பு : பாடத்தை விளக்கிக் காட்டப் பயன்படும் அச்செழுத்தை இது சுட்டுவது.

facility arrangement - The allocation of core memory and external devices by the executive as required by the programme to be executed.

வசதி ஏற்பாடு : நிறைவேற்றியினால் உள்ளக நினைவகமும் புறக்கருவியமைப்புகளும் ஒதுக்கப்படுதல். நிறைவேற்ற வேண்டிய நிகழ்நிரலுக்கு இவை தேவை.

facsimile - A process involving the electronic transmission of images generally from one system to a remote receiving station. Images are electronically scanned and converted into transmission signals. Later they are sent to the receiving station. The signals are then converted at the receiving station to create a duplicate of the original image.

உருநகலி : தொலைநகல். பொதுவாக, ஓர் அமைப்பிலிருந்து தொலைவிலுள்ள பெறும் நிலையத்திற்கு உருக்களின் மின்னணுக்களை