பக்கம்:கண்ணகிக் கதை.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கண்ணகி கதை

பண்ணுறு யாழிசைப்பண்ணொடு குலவ
இன்னமு தென்ன இசைத்து மகிழ்ந்தான்
காதல் விளைக்கும் களிவரிப் பாக்கள்
ஓதி இசைத்தான் உயர்ந்த
கோவலன்
பாட்டில் காதல் காட்டிஇசைத்தான் நாட்டம் மற்ருேர் மங்கை மீதெனக் கண்டவர்ஐயம்கொண்டிடஇசைத்தான்
தண்டமிழ்ப்பாடல்சாற்றியதுசொல்வோம்

        இசைவேறு

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல்அதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய்வாழிகாவேரிகங்னை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயற்கண்ணுய் மங்கை மாதர்பெருங்கற்பென்(று) அறிக்தேன் வாழி காவேரி

          வசனம்

இத்தண்கயபலஆற்றுவரிப்பாட்டு களையும்காணல் வரிப்பாட்டுக்களேயுக் கோவலன் யாழில் அமுதெனக்குழைத்து இசைத்துப் பாடினான். அவனது காதல் பாக்களைக் கருத்தோடு கேட்ட காதல் மாதவி,தானும் மற்றொரு ஆண்மகன்மீது காதல் கொண்டவளைப் போல விளைளாட்டாக வேடிக்கைப் பாடல் பாடத் தொடிங்கினாள் . அவள் பாடிய பாட்டையும் கேட்டு மகிழுங்கள்.

        பாட்டு

கைதை வேலிக் கழிவாய்வந்தெம் பொய்தல் அழித்துப் போனர் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/27&oldid=1298218" இலிருந்து மீள்விக்கப்பட்டது