பக்கம்:கண்ணகிக் கதை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கண்ணகி கதை

பேணி வணங்கமாட்டார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள் என்று கண்ணகி தன் தோழிக்குக் கூறினாள்.

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

என்று நம்முடைய தமிழ்வேதம் விதித்தது. இந்த வேத விதிக்குப் புறம்பாகவே தற்காலத் தமிழ் மாதர் நடந்து கொள்கிறார்கள் என்பது நாடறிந்த இரகசியம் ஐயா!மாலை வேளையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் மாதர்கள். வேலைமுடித்து விருப்போடு வெளியே புறப்பட்டுவிடுகிறார்கள். நேரே அந்த நேரிழை மாதர்கள் செல்வ தெங்கே? சொல்லவா வேண்டும் கையில் காசில்லை இயன்றாலும் கடன் வாங்கிக்கொண்டேனும் பேசும் படக்காட்சி சினிமா பார்ப்பதற்கு ஆர்ப்பரித்துக் கொண்டு செல் கின்றார்களே ! என்ன செய்வது ! இந்தப் படக்காட்சிகளால் நாட்டுக்கு விளையும் கேட்டை நாவால் கூற முடியுமா ? இந்தப் படக்காட்சிக்கு நுழைவுச் சீட்டுக் (டிக்கெட்டு) கிடைக்கவில்லை யென்றால் எங்கே நுழை கிறார்கள் இந்த மங்கையர்கள் தெரியுமா? கோவில்களில் நுழைகிறார்கள் ஐயா? ஊரில் எத்தனை கோவில்கள் உண்டோ, அத்தனையும் ஏறி இறங்கினாலொழிய வீட்டில் அவர்கட்கு நாட்டம் ஏற்படாது. இதற்குள் பொருள் தேடி உழைக்கச் சென்ற கணவன் இளைத்து களைத்து அலுத்து வீட்டையடைவான். பூட்டிய கதவைக் கண்டு உள்ளம் புழுங்கி, மெல்ல வெளியே செல்லுவான். இந்தக் காட்சிகளைத்தான் வீடுகளில் காணமுடிகிறது. நாட்டிற்கு நற்காலம் பிறக்கவேண்டும். நங்கையர்க்கு நல்லமனம் ! சிறக்கவேண்டும். இச் செய்தி ஒருபக்கம் இருக்கட்டும். இனிக் கண்ணகி கதைக்குச் செல்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/31&oldid=1296281" இலிருந்து மீள்விக்கப்பட்டது