பக்கம்:கண்ணகிக் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

கண்ணகி கதை

அவனைக் கொன்று, அச் சிலம்பைக் கொண்டுவருக" என்று கட்டளை யிட்டான். தனது எண்ணம் பலித்ததென்று தளுக்கி மகிழ்ந்த பொற்கொல்லன், காவலாளருடன் சென்றான். கோவலன் இருக்குமிடத்தைஅடைந்தான்; "இவர்கள் அரசன் ஆணையால் சிலம்பைப் பார்க்க வந்தவர்கள்" என்று கூறிச் சிலம்பை அவர்கட்குக் காட்டி, அவர்களைத் தனியே அழைத்துச் சென்று, சிலம்பின் சிறப்பைக் குறிப்பவன் போன்று, அரசியின் சிலம்புதான் இது என்று நம்புமாறு கூறினான். "இவன் கள்வனைப் போன்று காணப்படவில்லை; கொலைப்படுதற்கு உரியனல்லன் இவன்" என்று சொல்லிய காவலாளரை இகழ்ந்து உரைத்தான். "இவன் கள்வனே" என்று பல காரணங்காட்டி வற்புறுத்தினான். அப்போது கொலையஞ்சாப் பாதகக் காவலன் ஒருவன்,

பாட்டு

      
வாளாலே வீசிவிட்டான்
வந்துற்ற கோவலனை
மாளாத புகழுடையான்
மண்ணிலே சாய்ந்துவிட்டான்
பொன்னான பூதவுடல்
புழுதியில் புரண்டதையோ !
மன்னரும் போற்றுசீரான்
மண்ணிலே வீழ்ந்துவிட்டான்
தங்கமா மேனியெல்லாம்
தவிடுபொடி யாச்சுதையோ
பொங்கிய குருதிவெள்ளம்
பூமியை நனைத்ததையோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/45&oldid=1298109" இலிருந்து மீள்விக்கப்பட்டது