பக்கம்:கண்ணகிக் கதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணகி கதை

47

ஊழ்வினை சூழ்ந்ததையோ !
உயர்நீதி ஆழ்ந்ததையோ !
பாழ்வினை வந்ததாலே
பாதகம் நடந்ததையோ !
கண்டவர் கலங்கிநின்றார்
காரணம் தெரியநின்றார்
உண்டவர் செய்திகேட்டே
உண்ணாமல் எழுந்துவிட்டார்
ஆயர்தம் சேரிதன்னில்
அபசகுணம் பலவும்கண்டார்
நேயமிகு மா தரியாள்
நேரான சாந்திசெய்தாள்
திருமாலை வேண்டிநின்றார்
திகழ்குரவை யாடிநின்றார்
பரவியபெண் மாதரியாள்
படியவே வையைசென்றாள்
கோவலன் மாண்டசெய்தி
கோதையர்கள் ஓதக்கேட்டாள்
பாவையவள் கண்ணகியும்
பகர்செய்தி கேட்டறிந்தாள்
ஐயையோ ! கண்ணகியாள்
அடைந்ததுயர் யாருரைப்பார் !
வையத்தில் வீழ்ந்துருண்டாள்
வாய்விட்டுப் புலம்புகின்றாள்
ஆய்ச்சியர் சூழநின்றாள்
அரியமொழி கூறலுற்றாள்
காய்கதிர்ச் செல்வனே!என்
கணவனும் கள்வனாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/46&oldid=1298121" இலிருந்து மீள்விக்கப்பட்டது