பக்கம்:கண்ணகிக் கதை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



48

கண்ணகி கதை

இந்தமொழி கேட்டகதிரோன்
இல்லையவன் கள்வனில்லை
வந்தவனைக் கள்வனென்ற
மாநகரைத் தீயழிக்கும்
சூரியன் சொன்னமொழிகள்
தோகையவள் கேட்டவுடன்
வீரியம் பொங்கவந்தாள்
விரைந்துகொலைக் களமடைந்தாள்
கண்டவர் நடுங்கிநின்றார்
கண்ணகி கதறிவந்தாள்
கொண்டவன் கணவன்பேசக்
கொள்ளுவன் செவியிலென்றாள்
கற்புடைய மாதர்!கேளிர்
கற்புடையள் யானும் என்றாள்
பொற்புடைய கணவன்வார்த்தை
புகன்றிடக் கேட்பன்என்றாள்
வெட்டுண்ட களமடைந்தாள்
கோவலன் மேற்புரண்டாள்
கட்டழகன் மேனிதன்னைக்
கட்டியே தழுவியிட்டாள்
சாமியே என்னவீது
சார்ந்ததும் இதற்குத்தானோ
பூமியிலே பொன்னுடலும்
புரண்டிடவோ இங்குவந்தோம்
கோவலன் உயிர்த்தெழுந்தான்
அன்புமொழி கூறலுற்றான்
மாமதியைப் போன்றமுகம்
வாடியதே என்றுரைத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/47&oldid=1298128" இலிருந்து மீள்விக்கப்பட்டது