பக்கம்:கண்ணகிக் கதை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி கதை

53

திருவி வானிலே சுழற்றி வீசி எறிந்தாள். அப்பொழுதே அந்நகரில் அணைக்கமுடியாத பெருநெருப்புப் பற்றி அழிக்கத் தொடங்கியது. நெருப்பின் வெம்மையைப் பொறுக்க முடியாத மதுரையின் அதிதேவதை, கண்ணகியின் முன்னர்த் தோன்றினாள்.

பாட்டு

சீருடைய கண்ணகியே!
தென்மதுரைத் தெய்வமாவேன்
பேருடைய பாண்டிமன்னர்
பெயர்பெற்ற நீதிமன்னர்
அரியணையில் உயிர்துறந்த
அரசனும் நீதிதவறான்
உரியவுன் கணவன்மாய
உற்றகுறை சொல்லக்கேளாய்!
சிங்கபுரம் ஆண்டமன்னன்
சிறந்தவசு என்பவற்கும்
பொங்குபுகழ்க் கபிலபுரம்
புரந்தவன் குமரனுக்கும்
மிக்கபகை இருந்ததம்மா
வெல்லவும் முயன்றாரம்மா
தக்கவுயர் சிங்கபுரம்
சார்ந்தகடை வீதிதன்னில்
சங்கமன் என்னும் வணிகன்
தங்குபொருள் விற்றிருந்தான்
அங்கவனைக் கண்டபரதன்
அயலவன் ஒற்றனென்றான்
அரசனிடம் காட்டிநின்றான்
அரியகொலை செய்துவிட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/52&oldid=1306516" இலிருந்து மீள்விக்கப்பட்டது