பக்கம்:கண்ணகிக் கதை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதரசி கண்ணகியாள் தீதில்லா கற்கதையை
பூதலத்துப் பாவையர்க்குப் பொற்புடைய வழிகாட்டும் பெண்ணணங்கின் வாழ்வாகும் புண்ணியநற் சரிதமதைப் பண்ணான இன்தமிழில் பாடவருள் பண்ணவேண்டும் வில்லிசையில் இனிதமைத்து விளக்கவருள் கொழிக்க வேண்டும்
நல்லோர்கள் வியக்க இனி நாவிலமர்ந் துரைக்கவேண்டும்

8

<poem>.</ poem>

வசனம்
     தமிழ்ப் பெருமக்களே!தண்ணருள் தாய்மார்களே!உங்கள் பொன்னடிகளைப் போற்றி வணங்குகின்றோம். இந்தச் சமயத்திலே நந்தம்செந்தமிழ்த் தாய்மார்களுக்குத் தனித்ததொரு வணக்கம் செலுத்துகின்றோம். ஏன் என்று கேட்பீர்களோ? பெண்ணரசி கண்ணகியின் பண்ணமைந்த நற்கதையைப் பாடப் போகிறோம் அல்லவா ! அதற்காகத் தான் இங்குள்ள மங்கையர்க்கரசியர் எல்லாரும், கற்பரசி கண்ணகியின் புண்ணியச் சரிதத்தை, எண்ணத்தைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்தி உள்ளத்தோடு கேட்கவேண்டும்.கேட்டால், கண்ணகியின் கதையைக் கேட்டால் உங்கள் வீட்டிற்கு நன்மை;உங்கள் வாழ்வுக்கு இன்பம்;இந்த நாட்டிற்கே நன்மை!
    கற்புத் தெய்வமாகிய கண்ணகியின் கதையைக் கன்னித் தமிழ்மொழியில் உள்ள ஐம்பெருங்காவியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் விரித்துச் செப்புகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ச் சேரநாட்டைதற்போதைய மலையாள நாட்டை ஆண்டுவந்த மன்னனாகிய சேரன் செங்குட்டுவனின் தம்பியாக விளங்கிய இளங்கோவடிகள் என்னும் அரசுத்துறவி, சிலப்பதிகாரக் காவியத்தைத் தழிழர் சித்தமெல்லாம் தித்திக்கப் பாடியருளினர்.இளங்கோவடிகள், கண்ணகி வாழ்ந்தகாலத்தில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/7&oldid=1412612" இலிருந்து மீள்விக்கப்பட்டது