பக்கம்:கண்ணகி தேவி.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கண்ணகி தேவி

மலர்ச்சி காட்டி, ஒழுகினேன்; உம்முடைய தாயும் தந்தையும் அதனைக் குறிப்பாற்கண்டு, உள்ளத்தில் உதித்த அன்போடு கூடிய மொழிகளால் என் பொறுமையைப் பாராட்டி வருந்தினர்; அவர்கள் அங்கனம் வருந்துமாறு நீர் போற்றா ஒழுக்கத்தில் பொருந்தியிருந்தீர்; ஆயினும், உம்முடைய மொழியினைச் சிறிதும் மறுக்காத உள்ள வாழ்க்கையுடையேனாதலின், உமது கட்டளைப்படி உம்முடன் எழுந்து வந்தேன்; கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை அன்றோ?" என்றாள்.

இம்மொழிகளைக் கேட்ட மாத்திரத்தில் கோவலன், அழலில் இட்ட மெழுகென உருகி, "பாவம்! நீ தாய்தந்தை முதலிய சுற்றத்தாரையும் ஏவல்மகளிரையும் செவிலித்தாயரையும் தோழிகளையும் நீங்கி நாணம், மடம், அழகு, கற்பு என்னும் நான்கையும் அவர்க்கீடாகத் துணைக்கொண்டு என்னோடு வந்து, என் தனிமை களைந்தாய் ;

‘பொன்னே ! கொடியே ! புனைபூங் கோதாய் !
நாணின் பாவாய் ! நீணில விளக்கே !
கற்பின் கொழுந்தே ! பொற்பின் செல்வீ !

உன் சிலம்புகளுள் ஒன்றை நான் கொண்டு போய் விற்றுவருகின்றேன்; நான் வருந்துணையும் நீ தனிமையால் வருந்தாதொழிக,” என்று சொல்லிக் கண்ணகியை மீண்டும் தழுவிக்கொண்டான். ஆய்ச்சியர் யாவரும் குரவை ஆடப் போயிருந்தமையால், அருகில் ஒருவருமின்றிக் கண்ணகி தனித்திருத்தலை நினைந்த கோவலன், மனம்வெதும்பிக் கண்ணீர் சொரிந்தான்; கண்ணகி அதனைக் காணின் மிக வருந்துவாளென்று எண்ணிக் கண்ணீரை அவள் காணாவண்ணம் மறைத்தான்; சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு, மாதரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/44&oldid=1410986" இலிருந்து மீள்விக்கப்பட்டது