பக்கம்:கண்ணகி தேவி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

61

யாத்திரை செய்யின் உம்மை எதிர்ப்பார் அங்கு யாவர் ! இப்போது நீவிர்செய்யவிருக்கும் வடநாட்டு யாத்திரையைக் குறித்து ஆங்கு வாழும் அரசர்க்கெல்லாம் வில், கயல், புலி இவற்றை இலச்சினையாகக் கொண்ட உம் திருமுகத்தை முன்னே விடுத்தருள வேண்டும்.” என்று கூறினான்.

இதனைக் கேட்ட அழும்பில் வேள் என்னும் அமைச்சன், இந்நாவலந்தீவில் நமக்குப் பகைவராயுள்ளாரின் ஒற்றர்கள், நம் நகரத்தை நீங்காது இருப்பார்களாதலால், நாம் நம் வடநாட்டு எழுச்சியைப் பறையறைந்து நம் நகரில் தெரிவிக்குமாறு செய்திடின், அவ்வொற்றர்களே பகையரசர்க்கு இச்செய்தியைத் தெரிவித்துவிடுவர்; ஆதலால், திருமுகம் விடுத்தல் மிகையாகும்," என்று சொன்னான். அரசனும் அதற்கு உடன்பட்டுப் பேராற்றங்கரையினின்றும் பெயர்ந்து, பரிவாரங்களுடன் வஞ்சிமாநகர் வந்து சேர்க்தான், சேர்ந்ததும் யானைமேல்முரசை ஏற்றிச் செங்குட்டுவனதுவடநாட்டுப்பயணத்தைப்பற்றியும் அப்போது இடையிலுள்ள பகையரசர் வந்து வணங்காவிடில் அவர்க்கு நேரும் தீங்குகளைப்பற்றியும்

வாழ்க! எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றூழி யுலகங் காக்கென
விற்லைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்
கற்கொண்டு பெயரும்எங் காவல னாதலின்
வடதிசை மருங்கின் மன்னரெல்லாம்
இடுதிறை கொடுவக் தெதிரீ ராயின்
கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் ; கேளீ ராயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/69&oldid=1411060" இலிருந்து மீள்விக்கப்பட்டது