பக்கம்:கண்ணகி தேவி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கண்ணகி தேவி

நெறித்துவிட்டது' என்று நகை விளையக்கூறினான் இதனேக் கேட்ட சேரன், 'மாடல,நீ இப்போது கூறிய ஆசியக்கூற்றின் பொருள் இன்னதென விளங்கக்கூறுதி." என்று கூறினன். கூறலும், அவன் புகார் நகரத்தில் மாதவியும், கோவலனும் விழாமுடிவிற்கடலாடச் சென்றது முதல் நிகழ்ந்த வரலாறெல்லாம் விரித்துக்கூறித் தான் கூறிய சொற்றொடரின் பொருளை விளங்க வைத்தான்; மேலும் அவன் மதுரையில்கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடைக்குல மடக்தை மாதரி, அடைக்கலப் பொருளை இழந்தமைக்கு ஆற்றாது தீப்பாய்ந்திறக்ததும், கவுந்தியடிகள், கோவலன் கோலை பொறாது, உண்ணா நோன்புபூண்டு உயிர் நீத்ததும், கோவலன் தந்தை, பொருன் முழுதையும் தானம் புரிந்து தவக்கோலமுற்றதும், அவன் மனைவி பெருமனைக் கிழத்தி, புத்திர சோகத்தால் உயிர் விட்டதும், கண்ணகியின் தந்தை சமணமதம் சார்ந்ததும், அவன் மனைவி உயிர்நீத்ததும், இவற்றையெல்லாம் அறிந்த மாதவி பிக்குணிக்கோலம் பூண்டதும் ஆகிய தென்னாட்டுச் செய்திகள் பலவற்றையும் எடுத்து மொழிந்து, 'மதுரையினின்றும் புகாருக்குச் சென்ற யான் கூறிய செய்தி, அங்குப் பலர் இறத்தற்குக் காரணமானபடியால் அத்தீங்கு தீரக்கங்கையாட வந்தேன்,' என்றும் கூறி அங்கு அமர்ந்தான்.

இங்ஙனம் மறையவன் கூறியவற்றையெல்லாம் செவியேற்ற செங்குட்டுவன், அவனைப் பார்த்து, "நெடுஞ்செழியன் துஞ்சிய பிறகு பாண்டிநாடு எந்நிலை உற்றது?" என்று வினவ, மாடலன், “அரசே, கொற்கையிலிருந்த வெற்றி வேற்செழியன் மதுரைக்கு வந்து பத்தினிக் கடவுளுக்கு ஆயிரம் பொற் கொல்லரைப் பலியிட்டுக்களவேள்வியால்சாந்திபுரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/74&oldid=1410942" இலிருந்து மீள்விக்கப்பட்டது