பக்கம்:கண்ணகி தேவி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

73


ஒருத்தி, "நான் பெற்ற அருமந்த மகளே, உன் கணவன் தீய ஒழுக்கமுடையவனாய் உன்னைப் பிரிந்திருந்த நிலைமைக்கு வருந்திநின்றஉன் தாயாகிய யானும் அறியாமலே, நீ உன் கணவனுடன் அந்நியநாடு சென்றாய் உற்றார் யாருமில்லாமலே கணவனோடு அங்குச் கடுந்துன்பத்தை அடைந்தாய்,' என்று புலம்பினாள்.

ஒருத்தி, "என்னுடன் கூடவேயிருந்த உன்மனைவியும் என் மருகியுமாகிய கண்ணகியை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் காட்டுவழியே : வருந்திச்சென்றனையே! இதனை நினைக்குந்தோறும் என் மனம் வருந் துகிறது. என் அருமை மகனே, என்பால் ஒருமுறை வாராயோ!" என்று புலம்பினாள்.

மூன்றாவதாக மற்றோருத்தி, "இளையோனே, நீ என் மனையில் தங்கியிருந்த காலத்தில், குரவைக்கூத்தாடி முடிந்ததும் வையை ஆற்றுக்கு நீராடச்சென்றிருந்த நான், திரும்பி வரும்போது ஐயோ! நீ கொலை யுண்டிறந்தாய் என்று ஊரார் சொல்லக்கேட்டேன்; அதற்கேற்ப மனையில் வந்து பார்த்தபோது, உன்னைக் காணேனாய் வருந்தினேன்.எந்தாய், என்னே அறியாது எங்குச் சென்னையோ தெரிந்திலேனே!” என்று அழுதாள்.

இவ்வாறாக அச்சிறு பெண்கள் மூவரும் அப்பத்திணிக் கோயிலில் முதியோர் பேசும் பேச்சால் பேசி அரற்றி அழவும், சேரவேந்தனாகிய செங்குட்டுவன் வியப்புற்று, மறுமுறையும் மாடலனை நோக்கினான், அவன் நோக்கும்குறிப்பறிந்த மாடலன், அரசனுக்குக் கூறுவான் : "அரசே, கோவலனது அன்பிற்குரிய மனைவி கண்ணகியின்மேல் அவள் தாயும், கோவலுனது தாயும் மிகுந்த அன்புள்ளவர்கள்: ஆதலால் கண்ணகியும் கோவலனும் இறந்து சுவர்க்கம் புகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/81&oldid=1410921" இலிருந்து மீள்விக்கப்பட்டது