பக்கம்:கண்ணகி தேவி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கண்ணகி தேவி

செய்தியை என்மூலமாகக் கேட்டறிந்ததும் அவர்கள் உயிர் விட்டார்கள். அப்படி அவர்கள் உயிர் விட்டும், சுவர்க்கம் புகுதற்குரிய பெரும்புண்ணியங்களை அவர்கள் செய்திலராகலின், சுவர்க்கம் புகாமல் கண்ணகி மேல் வைத்த பற்றுக்காரணமாகப்பத்தினித்தெய்வம் எழுந்தருளியுள்ள வஞ்சிமா நகரத்தில் அரட்டன் செட்டி மனைவி வயிற்றில் இரட்டைப்பிள்ளைகளாய்ப் பிறந்தனர். ஆயர் முதுமகளாகிய மாதரி, கண்ணகி மேல் வைத்த பேரன்பினாலும், திருமால்பொருட்டுக் குரவைக் கூத்தாடிய விசேடத்தாலும் அரவனையில் பள்ளிகொண்ட பெருமான் திருவடிகளை அருச்சித்துப் பூஜிக்கும் சேடக்குடும்பியென்னும் அந்தணன் மகளாய்ப் பிறந்தனள். இதனால், நல்லறஞ் செய்தோர் சுவர்க்கம் அடைதலும், ஒன்றில் காதல் வைத்தவர் பூமியில் பற்றுள்ள விடத்தில் பிறத்தலும், பாவ புண்ணியங்களின் பயன் உடனே விளைதலும், பிறந்தவர் இறக்கலும், இறந்தவர் பிறத்தலும் புதியன என்பதன்றித் தொன்று தொட்டு வருவன என்பது நன்கு விளங்கும். நீ சிவபெருமான் திருவருளால் பிறந்து புகழ் மிகுந்த வேந்தனாய் விளங்குதலால், முற்பிறப்பிற் செய்த தவப்பயன்களையும், பெரியோர் தரிசனங்களையும் கையகத்துப் பொருள் போல நன்கு கண்டாய்.” என்று சொல்லித் தன் முன்னர் அழுது புலம்பிய சிறு பெண்கள் மூவரும் முற்பிறப்பில் முறையே கண்ணகியின் தாயும், கோவலன் தாயும்,ஆய்ச்சியாகிய மாதரியுமாய் இருந்தவர்கள் என்பதை விளக்கிச் சொன்னான்.

இவற்றைக் கேட்ட செங்குட்டுவன்,மிகவும் ஆச்சரியமுற்றான். அதன் மேல் அவன் கண்ணகியின் கோயிற் பூஜைப் படித்தரங்களுக்கு வேண்டிய நிலங் களைத் தானம் செய்து, நித்திய உற்சவங்கள் நடத்தித் தேவந்தியையேநித்திய பூசைகளைச் செய்து வரும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/82&oldid=1410922" இலிருந்து மீள்விக்கப்பட்டது