பக்கம்:கண்ணகி தேவி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கண்ணகி தேவி


ஆட்சி உரிமைக்குக் கேடு வாராதபடி ராஜ்ய செல்வத்தை வெறுத்து அன்றே துறவியாகிக் குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் வசித்து, "மோக்ஷமா கிய இராச்சியத்தை ஆளுதற்கு இருக்கும் வேந்தனல்லவோ நீ?"என்று முன் நிகழ்ந்ததும் பின் நிகழப்போவதுமாகிய இளங்கோவடிகள் வரலாற்றைக்கூறிற்று. இவ்வாறு தன் வரலாறுரைத்த கண்ணகி தேவியின் பெருமை தங்கிய சரித்திரத்தைப் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் அடியிற்காணுமாறு இளங்கோவடிகள் உபதேசிக்கிறார் :

" பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமன் உயிர்க்கோலை நீங்குமின்
தானம் செய்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன் மின் பொருள் மொழி நீங்கன் மின்
அறவோர் அவைக்களம அகலா தணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழைபுயிர் ஒம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும்........ பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினல் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உவநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுனை தேடுமின்
மல்லன் மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென."


இலங்கை அரசன் கஜபாகுவும், கொங்குமண்டலத்து இளங்கோசரும், சோழன் பெருநற்கிள்ளியும், வேறு பல அரசரும் தங்கள் நாட்டகத்துக் கண்ணகிக்குக் கோயில் கட்டுவித்து, விழாக்கள் செய்து வழிபட்டார்கள். அதுமுதல் பத்தினி வணக்கம் பரவி நாடு செழிப்புற்றுத் திகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/84&oldid=1411886" இலிருந்து மீள்விக்கப்பட்டது