பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துண்டு

113

நீ? அடிச்சக்கேன்னானாம்!...(சில பக்கங்களைப் படித்துப் பார்த்து) கதை இல்லே பெரிய காவியமா இருக்கே!...(மரியாதையான முறையில்) பாரத்பூஷண்! எப்படி இவ்வளவு நல்லதா எழுதினே! அற்புதமா இருக்குதே! சதா சீட்டாடிக் கொண்டு இருக்கிற ஆசாமி...உம்...

பாரத்: சீட்டாட்டம் முடிஞ்சி நீங்க எழுந்து போன பிறகு படுத்துக் தூங்கிவிடுவேனா? பிறகு விழித்து உட்கார்ந்து யோசனை செய்து எழுதறது...

நண்: புரட்சிகரமானதா இருக்குது பாரத்! (படிக்கிறான்.) ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து பணக்காரன் குவிக்கும் பவுன்கள், மூட்டை மூட்டையாக மாளிகைகளிலே உள்ளன. ஆனால் அவையெல்லாம் ஒரு காலத்தில் வெடிகுண்டுகளாகி மாளிகைகளை மண்மேடுகளாக்கும்.

பாரத்: (திடுக்கிட்டு) மாளிகைகள் மண்மேடுகளாகுமோ? உம்!அப்படியா இருக்குது...(சமாளித்துக்கொண்டு) ஆமாமாம்! பிரஞ்சுப்புரட்சி என்றால் என்னவாம்...

நண்பன்: (ஆர்வத்துடன்) பாரத்! இது அச்சாக வேண்டும்...அதுவும் எங்கள் போர்க்கோலம் அச்சகத்திலே! அதிர்ச்சி! சமூகத்திலே பெரிய அதிர்ச்சி ஏற்படப் போகிறது! உன் பெயர் எட்டுத்திக்கும் பரவப் போகிறது.

பாரத்: இரு, இரு! ஒரே அடியாகப் புகழ்ந்து விடாதே! உன் அப்பா இந்தப் புத்தகம் விலை போகும் என்று நம்பி அச்சடிக்க வேண்டுமே!

நண்: பணம் கொடுத்து, நாமே அச்சடித்து விற்றால் என்ன?

பாரத் : நமக்கு வேண்டாம், அந்த வீண்வேலை! அவரே போடட்டும், விற்கட்டும்...இலாபம் வந்தால், எனக்கு ஒரு பங்கு கொடுத்தால் போதும்...

நண் : சரி! நானே அப்பாவிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்.