இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
துண்டு
117
சில இடங்களில் ரொட்டித் துண்டு பற்றிய விளம்பரத் தாளை ஒட்டுகிறார்கள் சுவர்களில். புத்தகக் கடைகளில் ரொட்டித்துண்டு புத்தகம் காணப்படுகிறது. பலர் ஆவலோடு வாங்குகிறார்கள். கடைக்காரர், ஒரு பிரதி எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார் சுவைத்து. போர்க்கோலம் அச்சகத்தில் இருந்து புத்தகக் கட்டுகள் லாரியில் ஏற்றப்படுகின்றன. ஐயாயிரம் ரூபாய் செக் தருகிறார், பாரத்பூஷணுக்கு அச்சக முதலாளி. வெளியே உலவப் போன பாரத் பூஷணனைச் சூழ்ந்து கொண்டு நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.
காட்சி—23.
இடம்: பாரத்தின் விடுதி உள்ளறை.
இருப்: கதிர்வேல்.
நிலைமை: நடமாடச் சக்தியற்று கதிர்வேல் படுக்கையில் கிடக்கிறான். வேலையாள், 'ரொட்டித்துண்டு' என்ற பெயருள்ள புத்தகம் படித்துக் கொண்டிருக்கக் கண்டு, பதறி, அதைக் கேட்டு வாங்கிப் பார்க்கிறான். தன்னையுமறியாமல் ஆர்வம் பொங்கக் கூவுகிறான்.கதிர்வேல்: வெளிவந்துவிட்டதா! புத்தகமாகி விட்டதே...!
வேலையாள்: ஊரே கொண்டாடுதே அற்புதமான ஏடு என்று...
கதிர்: பாராட்டுகிறார்களா...