பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

21

சிங் : சபிச்சிக் கொட்டாதய்யா...இது சிங்காரவேலு வீட்டுக்கு அல்ல; ஏழைகளுக்கு. சரி! வந்த விஷயத்தைக் கவனிக்காமலே—என்னன்னு கேட்காமலே இருந்து விட்டேனே!...என்ன விஷயமா...வந்தீங்க?

வந்த.: ஒண்ணுமில்லிங்க...ஒரு புது வியாபாரத்தைப் பத்தி உங்களோட யோசனையைக் கேட்கலாம்னு...

சிங்.: இருக்கிற வியாபாரம் போதல்லே, புதுசா வேறே வேணுமா? சரி, ஆசை யாரை விடுது? சொல்லுங்க...என்ன வியபாரம் அது?

வந்த.: சிலோனுக்கு வெங்காய ஏற்றுமதி செய்தா...ஏதோ கொஞ்சம் கிடைக்கும்னு தெரியுது...

சிங்.: கொஞ்சம் என்னய்யா! நல்லாவே கிடைக்குது...அதனாலேதானே பேயா அலையறானுங்க பலபேர்! பர்மிட்டுக்கு...


வந்த.: நமக்கு அந்தக் கஷ்டம் இல்லிங்க...ஆறு கொடுத்து 'பர்மிட்' நம்ம பேருக்கு வருகிறபடி செய்து கிட்டேன். நம்ம சத்தார் சாயபுவோட பர்மிட்...

சிங்.: (ஒரு கணம் தீவிரமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்தவராகி, ஒரு வெடிச்சிரிப்பை உதிர்க்கிறார்) பைத்தியக்கார மனுஷன்யா நீர்! ஆசை கண்ணை மறைக்குது! சத்தார் சாயபு பர்மிட்டையா வாங்கிவிட்டீர்? ஆறும்...ரொக்கமாகவே கொடுத்தாச்சா!... போறாதவேளை...

வந்த.: என்னதுங்க என்ன சொல்றீங்க! ஆறு அதிகம்னு சொல்றிங்களா? ஆதாயம் கிடைக்கும்னு கணக்கு சொல்லுதே...

சிங்.: கூட்டல் கழித்தல் கணக்கு இலாபத்தைக் குவிச்சிக் காட்டும்யா!... யார் இல்லேன்னு சொல்றது?

வந்த.: சிரிச்சிங்களே...போறாத வேளை என்று வேறு சொன்னீங்களே...