இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
கண்ணாயிரத்தின்
தெரியுமேல்லோ...பிரதர் நாடியா! நாடியா! ஓடியா! ஓடியா! நாடியா...(பாடுகிறான்)
[கருப்பன் பின்புறம் திரும்பியபடி குடிக்கிறான். அவனை இழுத்துத் தன் பக்கம் திருப்பி மேலும் தருகிறான். போதை ஏற ஏற கருப்பனுக்கும் கூச்சம் போய்விடுகிறது. தாராளமாகக் குடிக்கிறான். குடிவெறியில் கண்ணாயிரம், அலங்காரப் பையைக் கருப்பன் கையில் மாட்டிவிட்டு நாடியா போல நடக்கச் செய்கிறான். தங்கச் செயின் போட்ட கைக்கடியாரத்தை எடுத்து, கருப்பன் கையில் கட்டிவிடுகிறான். மேலும் குடிக்கிறான். மயங்கிப் படுக்கையில் விழுகிறான், மயக்கம் மேலிட்டு. கருப்பன் சிறிது சிறிதாக நிதானமடைகிறான். மெள்ளத் தள்ளாடியபடி வீடு நோக்கிச் செல்கிறான்.]
காட்சி—3.
இடம்: கண்ணாயிரத்தின் அறை.
நிலைமை: சூரிய வெளிச்சம் அடிக்க ஆரம்பிக்கிறது.
[கதவு திறந்தே கிடக்கிறது. கண்ணாயிரம் அலங் கோலமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான். பாட்டில் கீழே உருண்டு கிடக்கிறது. வீடு கூட்டிடும் வீராயி வருகிறாள். விளக்கை அணைத்துவிட்டு, உருண்டு கிடந்த பாட்டிலைக் கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, கதவை மூடிவிட்டுச் செல்கிறாள், வேறு வேலைகளைக் கவனிக்க.]
காட்சி—4.
இடம்: மாளிகை மாடிக் கூடம்.