பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

31

சோத்துக்கு வேறே வழி இல்லாததாலே கெட்டு அலையறோம். கொட்டிக் கிடக்குதே பணம், குணம் பாரு எப்படி இருக்குதுன்னு...

சிங்: வாயை மூடிக்கிட்டுக் கிட...

பெ: (குத்தலாக) கொஞ்சம் பேசேன், கொஞ்சம் பேசேன்னு கூத்தாடினான் உன் மகன் ராத்திரி...

[கண்ணாயிரம் பணம் கொண்டு வந்து தருகிறான். கண்கலக்கத்துடன், வந்தவள் அவனை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் போகிறாள். சிங்காரவேலர் சோகமாக நாற்காலியில் அமருகிறார். சில விநாடிகள் இருவரும் மௌனமாக இருக்கிறார்கள். பிறகு பெருமூச்செறிந்தபடி...]

சிங்: கண்ணாயிரம்! நல்லா இருக்குதா, நீ செய்த காரியம்? ஊர் மெச்ச வாழற குடும்பம்டா இது...நம்மைப் பார்த்து மற்றவங்க நீதி, நியாயம், அன்பு, பண்பு - இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும். அந்த அர்த்தத்திலே தான் நம்ம இடத்தைப் பெரிய இடம்ணு ஊரார் சொல்றாங்க...நீ செய்த இந்தக் காரியம், நினைத்தாலே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்...அப்படிப்பட்ட காரியம்! யாரு செய்கிற காரியம் இதெல்லாம்? வக்குவழியத்ததுங்க கண்டபடி திரியும்: கண்டவளோடு சேர்ந்து கூத்தாடும். அதுகளுக்கு நல்லது கெட்டது தெரியாது; மான அவமானத்தைப் பத்தின அக்கரை இருக்காது; எப்படி நடந்தாலும் யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க. நாம் அப்படியா? நமக்கு அடுக்குமடா கண்ணாயிரம் இப்படிப் பட்ட காரியம்?

[கண்ணாயிரத்தின் மனம் நெகிழுகிறது. மறுகணம் கல்லாக்கிக் கொள்கிறான்.]

கண்: நான்தான் சொல்றனே, எனக்கு அந்தப் பெண்ணையே தெரியாதுன்னு...