இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
கண்ணாயிரத்தின்
அவன்: நாடியா! அப்படிப்பட்டவர்களை விரோதிச்சிக்கக் கூடாதம்மா...நான் சொல்றதைக் கேளு.
நாடி: வேறே வேலையைப் பாரு! வகையா வந்து மாட்டிக் கொண்டாங்க. பெரிய மனுஷனுங்க சாயம் வெளுக்க வேணுமேல்லோ...விடுவனா!
அவன்: எல்லாம் நம்ம சாயமுந்தான் வெளுத்துப் போகும்!
நாடி: விட்டுத்தள்ளு அண்ணே! நம்ம சாயம் இனிமேலா வெளுக்கப் போவுது!
அவன்: என்ன வேணுமானாலும் தருவாரு...
நாடி: ஏன் தரமாட்டாரு...எங்க மாமனாரு?
அவன்: என்னது...என்னது...?
நாடி: அப்படித்தான் கோர்ட் பதறப் போகுது...கொல்லுன்னு சிரிக்கப்போகுது...அப்பொ...அந்தப் பெரிய மனுஷன் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்றதைப் பார்க்கணும்...
அவன்: பெரிய கதையே நடந்திருக்குதுபோல இருக்குதே!
நாடி: ஆமா...கோர்ட்டிலே தான் சம்பூர்ண பட்டாபிஷேகம்...(சிரிக்கிறாள்)
[ஆர்மோனியத்தை வாசித்தபடி பாடுகிறாள். அவன் காரியம் நடக்காது என்பதைத் தெரிந்து கொண்டு வெளியே செல்கிறான்.]
காட்சி—8.
இடம் : மாளிகைக் கூடம்
இருப்போர்: சிங்காரவேலர்.
இருப்போர்: சிங்காரவேலர்.