உலகம்
59
நாடியாவின் மனம் ஓரளவு உருகிடத் தொடங்கிற்று. ஆனால் மறுகணம் மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.
ஆலயம் இங்கு; அலங்கோலம் அங்கு—வழியில் பார்த்தோமே, பெயர் என்ன, சிங்காரபுரி! அந்த மக்கள் சேற்றிலே புரள வேண்டியது; இங்கு சந்தன அபிஷேகம் நடத்த ஏற்பாடாகிறது. அதற்கு நான், 'பொய்சாட்சி' சொல்ல வேண்டும். நியாயம் வெகுநேர்த்தி, அய்யா! வெகு நேர்த்தி என்று வேதனையை அடக்கிக் கொண்டு நாடியா கூறினாள்.
சிங்காரவேலர் திடுக்கிடவில்லை.
"உண்மையான பேச்சு. நாடியா! குப்பம் அங்கே கோலாகலம் இங்கே! இது என்ன நியாயம் என்றா கேட்கிறாய் நாடியா?
நான் சொல்ல வந்ததில் ஒரு பாதி மட்டுமே சொல்லி முடித்தேன். இந்தத் தேவாலயத் திருப்பணியுடன் இணைந்தது குப்பத்தைத் திருத்தி அமைப்பதும். பார்த்திருப்பாயே, 'சிங்காரபுரி' என்ற பெயர்ப் பலகையை. என் பெயரைச் சூட்டிவிட்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். அந்தக் குப்பத்தை உண்மையிலேயே சிங்காரபுரி ஆக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தச் சிங்காரபுரிக்குத்தான் இந்தக் கோயில் வருமானம் அவ்வளவும். புரிகிறதா? தேவாலயப் பணி முடிந்தால்தான். குப்பம் சீரூராகும். பெயர் சிங்காரபுரி என்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் ஒத்துக் கொண்டால் நாடியாபுரி என்றே நான் பெயரிடுவேன்—உன் கையில்தான் இருக்கிறது அதன் எதிர் காலமும்! அந்தக் குப்பத்தார்தான் இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை உழப்போகிறார்கள்...கூலிக்கு அல்ல...குத்தகைக்கும் அல்ல...குடும்பம் ஒன்றுக்கு ஐந்து ஏக்கர், இந்தக் கோயில் நிலத்திலிருந்து" என்றார் சிங்கார வேலர்.
நாடியாவின் மனக் கண்முன், குப்பம் புது சீருராகத் தெரியலாயிற்று! குப்பை மேட்டில் புரண்டு கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளிகளில் படிக்கும் காட்சி தெரிந்தது. பள்ளம் சேறு எல்லாம் மறைந்து, வரிசை வரிசையாக வீடுகள்! வீடு-