பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கண்ணாயிரத்தின்

களில் விளக்கொளி—மக்கள் முகத்தில் மகிழ்ச்சி ஒளி தென்பட்டது.

நாடியா, சில ஆண்டுகள் நாடகத்தில் இருந்தவள்; ஏழையர் வாழ்வு சீர்பட வேண்டும் என்பது பற்றியே 'வசனம்' பல, பாடம் அவளுக்கு.

"உண்மையாகவா?" என்று தழதழத்த குரலில் கேட்டாள்.

சிங்காரவேலர் ஒரு வசீகரமான புன்னகையைக் காட்டியபடி தலையசைத்தார்; நாடியா தலை கவிழ்ந்துகொண்டாள்.

"நாடியா! எனக்குத் தெரியும். நீ படபடவென்று பேசுபவளே தவிர நல்ல மனம், இளகிய மனம் உனக்கு என்று. கருப்பனைப்பற்றிக் கவலைப்படாதே. மேல்கோர்ட்டில் அவனுக்காக வாதாட வேறு ஏற்பாடு செய்து விடுதலை வாங்கித் தரமுடியும். இப்போது என் குடும்பப் பெயர் காப்பாற்றப்பட வேண்டும். இத்தனை ஏழைக் குடும்பங்களின் நல்வாழ்வுக்காக. என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார். "ஆகட்டும், உங்கள் இஷ்டம்போல" என்றாள் நாடியா.

காட்சி—10

இடம்: வழக்கு மன்றம்
இருப்போர்: சிங்காரவேலர், கண்ணாயிரம், நாடியா, கருப்பன், வீராயி, வழக்கறிஞர்கள்.
நிலைமை: [கருப்பன் கூண்டில் நிறுத்தப் பட்டிருக்கிறான். சாட்சிக் கூண்டில் கண்ணாயிரம் நிற்கிறான்]

கண்ணாயிரம் சார்பில் வந்துள்ள வழக்கறிஞர்...

வ: (நாடியாவின் அலங்காரப் பையைக் காட்டி) இது யாருடையது என்று தெரியுமா?

கண்: (சிங்காரவேலரைப் பார்த்துவிட்டு) தெரியாது...