62
கண்ணாயிரத்தின்
தண்டனையும், கருப்பனுக்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறேன்.
அண்டப்புளுகு பேசுவது, ஆளை அடிப்பது, அகப்பட்டதைத் திருடுவது போன்ற குற்றம் புரிவோர்கள், சமூக விரோதிகள். அவர்களால் நாட்டுக்கே ஆபத்து. ஆகவே, அப்படிப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை தந்தால் மட்டும் போதாது; சமூகம் அப்படிப்பட்டவர்களைக் காரித் துப்ப வேண்டும்.
காட்சி—11.
இருப்போர்: சிங்காரவேலர், அன்னபூரணி, கண்ணாயிரம்.
நிலைமை: சிங்காரவேலரும் கண்ணாயிரமும் வந்தது கண்டு அன்னபூரணி ஆவலாக வருகிறார்கள்
அன்: என்ன தம்பி ஆச்சி?
சிங்: ஆகவேண்டியது ஆச்சி...ஆறு மாசம் அந்தப் பயலுக்கு; மூன்று மாசம் அவளுக்கு!
அன்: பாவம்! போறாத வேளை! என்ன செய்வது? அதனதன் விதிப்படி நடக்குது...இரு தம்பி! காப்பி கொண்டு வர்றேன்...
கண்: (குத்தலாக) காரித்துப்ப வேண்டுமாம் அப்பா! கேட்டீர்களா, தீர்ப்பை! அண்டப்புளுகு பேசுபவர்கள் சமூக விரோதிகள். நாட்டுக்கே ஆபத்து...காரித் துப்ப வேண்டும் என்கிறார் நீதிபதி...
சிங்: (சலிப்புடன்) சரி, சரி! சும்மா விடு...போய்ப் படு...