உலகம்
67
சிங்: (வெறுப்புடன்) அந்த இழவுக்குப் போய்க் கொண்டிருந்தால்கூடப் பரவாயில்லையே !... இப்ப 'அய்யா' உலகத்தைத் திருத்தக் கிளம்பிட்டாரே, உனக்குத் தெரியாதா! உழவனுக்கே நிலம்...கொடுக்கச் சொல்றாரே!...இவங்க பாட்டன் சொத்து...பங்கு போட்டு கொடுக்கச் சொல்லி இவர் உத்திரவு போட்டு விட்டாரு...தெரியாதா உனக்கு?...குடும்ப கௌரவமே நாசமாகுது...கேவலமாப் பேசறானுங்க...
கண்: (கோபிக்காமல் மெல்லிய குரலில்) கேவலமாகப் பேசாமே வாழ்த்துவாங்களா, நம்ம செய்யிற காரியத்துக்கு.
சிங்: (கோபமாக) என்னடா சொல்றே...என்ன சொல்றே?
அன்: சும்மா இருடா, தம்பி!
சிங்: ஏண்டா முணுமுணுக்கறே! நம்மாலேதானே...குடும்ப மானமே போகுது என்கிற எண்ணம் இருந்தா...இப்படியா நடந்து கொள்வே?
கண்: என்னாலே ஒண்ணும் குடும்ப மானம் போகவில்லை...ஊரிலே கேவலமாப் பேசறவங்க...என்னைப்பத்தி எதுவும் பேசல்லே...
சிங்: அப்படின்னா...
அன்: (சலிப்புடன்) விட்டுத் தொலைடா தம்பி! கண்ணாயிரம், நீயும் ஏன் விதண்டாவாதம் பேசிக்கிட்டு இருக்கறே...
சிங்: பேசட்டும் அக்கா! பேசட்டும்னுதான் நானும் சொல்றேன்...மூடி மூடி ஏன் வைக்க வேணும்?
[வேகவேகமாகச் சென்று, கவிழ்ந்து கொண்டிருக்கும் அவன் முகத்தைத் தூக்கி நிறுத்தியபடி...]
டேய்! என்னைப் பார்த்துப் பேசு...சொல்ல..நினைக்கிறதை தைரியமாச் சொல்லேண்டா...ஊரிலே எவனாவது