80
ரொட்டித்
இருவரும் பதறுகிறார்கள். செய்தித்தாளை, அவசரமாக வேலையாள் எடுக்கச் செல்கிறான். அது காற்றிலே பறக்கிறது.
அதிலே ரொட்டித் துண்டு விளம்பரம் கொட்டை எழுத்திலே இருக்கிறது.
மோட்டாரில் இருந்த ராம்லால் கண்களில் விளம்பரம் தெரிகிறது. கீழே இறங்கி, வேகமாக உள்ளே செல்கிறார்.
காட்சி—4.
இடம்: மாளிகை உட்புறக்கூடம்; அலங்கார இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு புறம், மேஜை மீது டெலிபோன் இருக்கிறது.
இருப்: நடுத்தர மாது சோபாவில் உட்கார்ந்திருக்கிறார்கள், பூ தொடுத்துக்கொண்டு, நிறைய நகைகள் பூட்டிக் கொண்டு, சரிகைப் புடவைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முகத்திலே கவர்ச்சி துளியும் இல்லை. நிம்மதியான வாழ்க்கையின் மெருகு மட்டும் முகத்தில் தெரிகிறது.
நிலைமை: ராம்லால் உள்ளே நுழையக் கண்டு, மாது எழுந்து நின்றபடி...சுப்புத்தாயி: ரயில் லேட்டா?
ராம்: உம்...உன்னோட கடிகாரம் ஓடுது! கண், மண் தெரியாமல், ரயில் வர வேண்டிய நேரத்துக்குத்தான் வந்தது.